பக்கம் எண் :

பண்டார மும்மணிக்கோவை441

திருமா முனிவர் சிகாமணியென் கோசீர்
தருமாசி லாமணியைத் தான்.    
(12)

கட்டளைக் கலித்துறை
577.
தானவ னாகிய தன்மைபெற் றானடி தாழப்பெற்றால்
தானவ னாகிய தன்மைபெற் றுய்வனத் தன்மையின்றித்
தானவ னாகிய தன்மைபெற் றேற்கரு டாழ்சடிலத்
தானவ னாகம் பெறாமாசி லாமணிச் சம்பந்தனே.        
(13)

நேரிசை யாசிரியப்பா
578.
    பந்தனை தவிராச் சிந்தனை நிகர்ப்பப்
    பாயிருள் பரந்த மாயிரும் பொழிலிற்
    கொளற்குரி மாந்தர்க் களித்தல் செய்யா
    தரும்பூண் சுமந்த வறிவி லாளரிற்
5
    சுரும்பூண் வெறுத்த துதைமலர் வேங்கை
    தன்மருங் குறீஇப் பொன்மலர் பிலிற்ற
    இலையறப் பூத்த சுதைமலர்ப் புன்னையின்
    மெய்ப்புல னோக்கார் கட்புலன் கடுப்ப

    577. தான் அவனாகிய தன்மை பெற்றான் - சிவோகம் பாவனை செய்தவன். அடி - நின் திருவடியை. தான் - அச் சிவஞானி. அவனாகிய தன்மை பெற்று - சிவமாம் இயல்பு பெற்று. உய்வன் - என்றும் மாறாது அந்நிலையிலிருப்பான்; “சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட, அத்தனெனக் கருளியவாறு” (திருவா.) அத்தன்மையின்றி - சிவோகம் பாவனையில்லாமல் தான்: அசைநிலை. அவனாகிய - வீணாகிய. தன்மை - நானே முதலென்றல். அருள் - அருள் புரிவாயாக. சடிலத்தானவன் நாகம் பெறா - சடையிலுள்ள சந்திரனையும் ஆபரணமாகிய நாகத்தையும் பெறாத; தானவன் - சந்திரன்; “உயர்வினா லெமன்வா னவன்கா ணுரைப்பா ருனக்குமொரு தானவப்பேர்” (சேக்கிழார் பிள்ளைத் தமிழ், அம்புலிப். 3). இறைவனே தன் திருவுருவத்தை மறைத்து மானிடச் சட்டை சாத்தி ஆசிரியராக எழுந்தருளினானென்று தெரிவித்தபடி.

    578. (அடி, 1-17) மதுரையின் வளம் கூறப்படும்.

    (1) பந்தனை - பற்று. சிந்தனை - மனம்.

    (5-6) சுரும்பூண் வெறுத்த - வண்டுகள் தேனை உண்ணுதலை வெறுத்த, வேங்கைமலரில் வண்டு வீழாதென்பர். தன்னென்றது பின்வரும் புன்னையை. பிலிற்ற - உதிர்ப்ப.

    (7-10) சுதைமலர் - வெண்ணிறமுடைய மலர். மெய்ப்புலன் நோக்கார் கட்புலன் கடுப்ப - உண்மையான பொருள்களைப் பாராத குருடர்களது