| கொருகளஞ் செய்யு முழவ னாகி |
| மாநிலம் புரக்கு மாசி லாமணி |
20 | ஞானசம் பந்த ஞான தேசிக |
| நல்லருட் டிறத்தா னம்பி நீயே |
| பல்லுயிர்த் தொகுதியும் பயங்கொண் டுய்கெனக் |
| குடிலை யென்னுந் தடவய னாப்பண் |
| அருள்வித் திட்டுக் கருணைநீர் பாய்ச்சி |
25 | வேத மென்னும் பாதவம் வளர்த்தனை |
| பாதவ மதனிற் படுபயன் பலவே, அவற்றுள் |
| இலைகொண் டுவந்தனர் பலரே யிலையொரீஇத் |
| தளிர்கொண் டுவந்தனர் பலரே தளிரீஇ |
| அரும்பொடு மலர்பிஞ் சருங்கா யென்றிவை |
30 | விரும்பினர் கொண்டுகொண் டுவந்தனர் பலரே |
| அவ்வா றுறுப்பு மிவ்வாறு பயப்ப |
| ஓரும்வே தாந்தமென் றுச்சியிற் பழுத்த |
| ஆரா வின்ப வருங்கனி பிழிந்து |
| சாரங் கொண்ட சைவசித் தாந்தத் |
35 | தேனமு தருந்தினர் சிலரே யனவர் |
| நன்னிலை பெறுதற் கன்னிய னாயினும் |
| அன்னவர் கமலப் பொன்னடி விளக்கியத் |
| தீம்புன லமுத மார்ந்தன னதனால் |
| வேம்பெனக் கொண்டன்ன் விண்ணவ ரமுதே. |