நேரிசை வெண்பா 579. | கண்ணிற் கணியாங் கதிர்மாசி லாமணியைப் | பண்ணிற் கணியாப் பகல்வரால் - எண்ணுங்காற் | பன்னூலிற் கோக்கப் படுமணியன் றிம்மணிமற் | றிந்நூலிற் கோக்குமணி யென்று. | | | |
கட்டளைக்கலித்துறை 580. | எனவச மாகநில் லாதநெஞ் சாமிரும் பைக்குழைத்துத் | தன்வச மாக்கொண் டிழுக்கின்ற தாற்றொண்டர் தம்மையருள் | மன்வச மாகச் செயுமாசி லாமணி மாமணிக்குப் | பொன்வச மாகச்செய் காந்தமென் றேசொல்லப் போந்ததுவே. | | | |
நேரிசை யாசிரியப்பா 581. | போந்தையங் கண்ணி வேந்துவிற் பொறித்த | மன்பெருங் கிரியின் மென்கரும் பெழுதித் | தேசுலாம் பசும்பொற் சிகரமந் தரத்தின் | வாசுகி பிணித்தென மணிக்கச் சிறுக்கிக்5 | கடாம்பொழி கரடக் களிநல் லியானை | படாம்புனைந் தென்னப் பைந்துகில் போர்த்துப் | | | | | |
579. பண்ணிற்கணி - இசைப்பாட்டிற்கு அலங்காரமாக இருப்பவன்; பணி; ஆகுபெயர். பன் நூல் - பஞ்சினாலாகிய நூல்; பன் - பஞ்சு; இந்நூலில் - இந்தச் செய்யுள் நூலில். என்று பகல்வரால். ஏனைமணி பஞ்சினாலாகிய நூலிற் கோக்கப்படும்; இது செய்யுணூலிற் கோக்கப்படுமென்று இரண்டு மணிக்கும் வாசி கூறியவாறு.
580. நெஞ்சாம் இரும்பை; “இரும்புதரு மனத்தேனை” (திருவா.) குழைத்து - குழையச்செய்து, பொன் - இங்கே இரும்பு. இந்தமணியை இரும்பை இழுக்கும் காந்தமென்றே சொல்லவேண்டு மென்றுபடி. மாமணிக்குத் தன்மை போந்ததுவென ஒருசொல் வருவித்துரைக்க.
581. (அடி, 1-21) திருவாரூரின் சிறப்பைக் கூறுகின்றார்.
(1) போந்தையங் கண்ணி வேந்து - பனங்குருத்தாலாகிய மாலையை அணிந்த சேரன். வில்லைப் பொறித்த.
(2) கிரி - இமயமலை.
(1-2) சேரன் இமயத்தில் விற்பொறியைப் பொறித்தமை, “அமை வரலருவி யிமையம்விற் பொறித்து” (பதிற். 2-ஆம் பத்துப் பதிகம்) என்பதனால் விளங்கும். கரும்பென்றது மன்மதனுடைய வில்லின் வடிவத்தை.
|