பக்கம் எண் :

பண்டார மும்மணிக்கோவை445

பிதிர்சுணங் கலர்ந்த கதிர்முலை மடந்தையர்
விட்புலத் தவர்க்குங் கட்புலன் கதுவாச்
சூளிகை வகுத்த மாளிகை வைப்பிற்
10
சுவல்கைத் தாங்குபு மதியணந்து பார்க்கச்
சேணிகந் தோங்கும் யாணர்செய் குன்றத்
தாடகத் தியன்ற சூடகக் கரத்தால்
மாடகத் திவ்வியாழ் மருமமீ தணைத்து
மூவகை நிலையத் தேழுசுர நிறீஇக்
15
கொவ்வைவாய் திறந்து குயிலென மிழற்றுபு
மென்னரம் புகிரான் விரன்முறை தடவிக்
கின்னரம் வியக்குங் கீதம் பாட
நகைநில வெறிக்கு முகமதி காணூஉச்
சந்திர காந்தத்திற் சமைத்தசெய் குன்றம்
20
மைந்தர்போன் றுருகி மழைக்கணீர் சொரியப்
பல்வளஞ் சுரக்கும் பைந்தமிழ்க் கமலை

    (1-7) மடந்தையரது கொங்கைகளின் மீது வில் எழுதியதற்குச் சேரன் இமயத்தில் விற்பொறித்ததும், அவற்றைக் கச்சால் இறுக்கியதற்கு மந்தரமலையை வாசுகித் தாம்பாற் பிணித்ததும், அவற்றின்மேல் ஆடை போர்த்ததற்கு யானையின் முகத்தின் மேல் படாம் புனைந்ததும் உவமைகள்.

    எழுதி இறுக்கிப் போர்த்து அலர்ந்த முலை மடந்தையரென்க.

    (7-17) இவ்வடிகளில் அம்மடந்தையர் மாளிகைமீதிருந்து யாழ் வாசித்தல் கூறப்படும்.

    (8) விட்புலத்தவர்க்கும் - தேவர்க்கும்; உம்மை, சிறப்பு.

    (9) சூளிகை - மாடங்களின்மேல் உள்ள அறை.

    (10) சுவல் - பிடர். அணந்து - அண்ணாந்து; பிடரைக் கையாற்றாங்கி மேனோக்குதல்: “தூணறா முழவுத் தோண்மடித் தும்பர் சுவல்பிடித் தணந்துபார்த் துணங்கும், தோரண மாடக் கூடல்” (150).

    (11) சேண் இகந்து - விண்ணுலகத்தைக் கடந்து. யாணர் - அழகு. செய்குன்றம் - கட்டுமலை.

    (12) ஆடகத்து இயன்ற சூடகம் - பொன் வளை.

    (13) மாடகம் - முறுக்காணி. யாழை மருமமீது அணைத்து என்க; மருமம் - மார்பு.

    (14) மூவகை நிலையம் - வலிவு, மெலிவு, சமம் என்பன.

    (16) நரம்பைத் தடவி.

    (17) கின்னரம் - ஒருவகைப் பறவை; பதினெண்கணத்துள் ஒன்றாகிய கின்னரச்சாதியுமாம். கீதம் - இசைப்பாட்டு.