பக்கம் எண் :

446குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

நல்வளம் பதிவாழ் ஞானசம் பந்த
பாசமா மிருட்கோர் படர்மணி விளக்கெனும்
மாசி லாமணித் தேசிக ராய
25
சாற்றுவன் கேண்மதி மாற்றமொன் றுளதே
மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர் வார
மொழிதடு மாற வுழுவலன் பலைப்பச்
சத்திநி பாத்த் தன்மைவந் தடைந்தோர்க்
கப்பொருள் புரிதற் கதுபொழு தாகலின்
30
மெய்ப்பொரு ளுணர்த்துதல் வியப்பெனப் படாதே
சொற்றமிழ் விரகன் றுணைக்கண் சாத்த
முற்றுணர் கேள்வியர் பற்பல ராயினும்
கைசொலக் கேட்குங் கட்செவி மூங்கைக்
குய்வகை புணர்த்த தொருவியப் பாகலின்
35
அன்னது கடுப்பநின் சந்நிதி விசேடத்
தின்னருள் பெறாதவர் யாவரு மிலரென
வியப்புள தாக நயப்பதொன்றுளதே
அனையதீங் கென்னென வினவுதி யாலெனிற்
கதலித் தண்டிற் பொதிதழற் கொளீஇப்
40
பற்றா திருப்பினும் பைப்பைய மூட்டுபு
மற்றொரு சூழ்ச்சியிற் பற்றுவித் தாலென

    (23) இருட்கு - இருளை அழித்தற்கு. மணி விளக்கு - இரத்தின தீபம்.

    (26-30) சத்திநிபாதத்தை அடைந்தவர்க்கு உண்மைப் பொருளை உபதேசித்தல் வியப்பு அன்று; செய்யவேண்டுவதே.

    (31-5) இவ்வடிகளில் திருவாதவூர்ர் சிதம்பரத்தில் ஈழத்தரசனுடைய மூங்கைப் பெண்ணைப் பேசவைத்த செயல் கூறப்படுகின்றது.

    (31) தமிழ் விரகன் - திருவாதவூரர்; இத்திருநாமம் திருஞான சம்பந்தர்க்கே பெரும்பாலும் வழங்குகின்றது.

    (33) கட்செவி - கண்ணையே காதாக உடைய. மூங்கை - ஊமைப் பெண். ஊமைகள் கையாற் சொல்லக் கண்ணாற் கேட்டல்: “கையி னாற் சுலக் கண்களிற் கேட்டிடும், மொய்கொள் சிந்தையின் மூங்கையுமாயினேம்” (சீவக. 997).

    (35) கடுப்ப - ஒப்ப.

    (39) கதலித்தண்டு - வாழைத்தண்டு.

    (40) பைப்பைய - மெல்ல மெல்ல.

    (41) சூழ்ச்சியின் - ஆலோசனையினால்.