| ஒருசிறி தெனினும் பருவமின் றாயினும் | | பவவிரு டுரந்தருள் பதியத் | | தவமில் பேதையேன் றனக்கருள் வதுவே. |
நேரிசை வெண்பா 582. | தன்னேரி லாஞான சம்பந்தன் றாளடைந்தார்க் | | கென்னே யிருள்வெளியா மென்பரால் - அன்னோன் | | அருளாத போதுவெளி யாயிருந்த வெல்லாம் | | |
கட்டளைக் கலித்துறை 583. | என்செய லாலொன்றும் யான்செய்வ | | தில்லை யெனக்கவமே | புன்செய லாம்வினைப் போகமுண் | | டாவதென் போதமில்லேன் | | தன்செய லாயவெல் லாமாசி | | லாமணிச் சம்பந்தநின் | | நன்செய லாயினு மென்செய | | லர்செய்யு நானென்பதே. | |
நேரிசையாசிரியப்பா 584. | நான்மறைக் கிழவ நற்றவ முதல்வ | | நூன்மறை பயின்ற நுண்மைசா லறிஞ | | சொற்சுவை பழுத்த தொகைத்தமிழ்க் கவிஞ | | கற்றவர் வியக்குங் காவியப் புலவ | 5. | செவிதொறுஞ் செவிதொறுந் தெள்ளமு தூட்டுபு | | கவிஞர்வயி னிரப்புங் கல்விப் பிரசங்க | | வெள்ளிடைத் தோன்றா துள்ளத் துணர்த்தவும | | சேய்நிலை நின்று திருக்கண் சாத்தவும் | | சாயா மும்மலச் சகலரே முய்ய |
(38-44) அனையது அருள்வதுவே என்க.
582. இருள் - அஞ்ஞானம். வெளி - ஞானம். அவன் திருவருளால் இருளாயின வெல்லாம் வெளியாயின என்பது கருத்து; இருள் - உலகம்; வெளி - முத்தி; “மெய்யைப் பொய்யென்றான் வெளியை நல்ல வீடென்றான்” என்றார் ஒரு பெரியார்.
583. அடியேன் செயலெல்லாம் நின்செயலாயிருப்ப வினைப்போகத்தை அடியேன் அனுபவித்தற்குக் காரணம் அடியேனுக்குள்ள அகங்காரமே.
584. (5) கேட்பவர் செவிகள் தோறும்.
(6) வயின் - வயிறு, இடம்: சிலேடை.
(7) வெள்ளிடை - வெளியிடத்தே. உள்ளத்து உணர்த்துதல்; விஞ்ஞானாகலர் திறத்தில்.
(8) திருக்கண் சாத்துதல், பிரளயாகலர் திறத்தில்.
|