பக்கம் எண் :

468குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

உரிப்பாதி யிற்படைத் தோர்பாதி யிற்றுடைத் தூழிதொறும் 
விருப்பா ருயிர்களின் மேல்வைத்துத் தாஞ்செயும் வேலைகண்டே.        
(9)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
608.
கண்ணொன்று திருநுதலிற் கனலுருவ
    மாப்படைத்த காசி நாதா
தண்ணொன்று நறையிதழித் தாரென்றா
  ணெட்டுயிர்த்தா டரைமேல் வீழ்ந்தாள்
எண்ணொன்று முணராமே கிடக்கின்றா
  ளிதுகண்டா லெழுத்தொன் றோதத்
துண்ணென்று வருவரெனத் துணிந்தனளோ
  வறியேனித் தோகை தானே.    
(10)

நேரிசை வெண்பா
609.
தோகை யுயிர்முடிப்பான் றும்பைமுடித் தான்மதவேள்
வாகை முடித்திடவும் வல்லனே - ஆகெடுவீர்

செய்து; பார்த்து எனலுமாம். ஆதலால், அவிமுத்தத்திருப்பார் கண் மூடுவது எங்கே? அவருக்கு ஓய்வில்லை யென்றபடி.

    608. தோழி கூற்று.

    இதழித்தார் - கொன்றைமாலை. கொன்றைமாலையை வாங்கித் தர வேண்டுமென்று கூற நினைந்தவளை, இதழித்தாரென்ற அளவில் மேலே கூற இயலாமல் சோர்ந்து நெட்டுயிர்த்தா ளென்றபடி; “மடமா மயிலே குயிலே மழலை, நடைமா ணனமே நலமார் கிளியே, உடனாடுமெனை யனையென் றுருகாத், தொடை யாழ் மழலை மொழிசோர்ந் தனளே” (சீவக. 1526) என்பதும், ‘என் ஐயனை யென்ற அளவிலே உருகி அவற்றிற்குக் கூறுகின்ற காரியத்தை மறந்தாளென்க’ என்னும் அதன் உரையும் இங்கே அறிதற்குரியன. இது கண்டால் - இங்ஙனம் தான் மூர்ச்சித்துக் கிடத்தலைக் கண்டால். எழுத்து ஒன்று ஓத - பிரணவத்தை உபதேசிக்க (600). எழுத்தொன்று ஓத வருவரெனத் துணிந்தனளோ என ஐயத்துள் ஒருதலையே கூறினாள்; அதுவே பெரும்பான்மை யாகுமென்பது பற்றி.

    இத்தோகை தாரென்றாள்; நெட்டுயிர்த்தாள்; வீழ்ந்தாள்; கிடக்கின்றாள்; வருவரெனத் துணிந்தனளோ? அன்றி வேறு யாது கருதினளோ அறியேனென்றபடி.

    609. தோழி கூற்று.

    உயிர் முடிப்பான் - உயிரை நீக்குவதற்கு. மதவேள் தும்ப மாலையை முடித்துக் கொண்டான். தும்பைமாலை போர் செய்வோர் அணியும் மாலை;