| காமாந் தகர்காசிக் கண்ணதலார்க் கோதீர்மற் | | |
கட்டளைக் கலித்துறை 610. | எடுக்கச் சிவந்த சிலம்படி யாரகி லேசர்நறைக் | | கடுக்கைச் சடைமுடி யாரடி யார்க்குக் கலைகள் கொய்து | | கொடுக்கக் கொடுக்க வளர்கின்ற வாவெறுங் கூட்டிலெரி | | மடுக்கக் குறையுயிர் மாதரைத் தேடு மதிக்கொழுந்தே. |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 611. | கொழுதி வரிவண் டுழுதுழக்குங் | | குழலீர் நறுங்கட் கோதையிவள் | | அழுத விழிநீர் முந்நீரை | | யுவர்நீ ராக்கு மதுகூறீர் |
“அதிரப், பொருவது தும்பையாம்” (பழம்பாடல்.) வாகை முடித்திட வென்றது தான் மேற்கொண்ட போரில் வெற்றி யடைய வென்றவாறு; வெற்றியடைதலாவது தலைவியின் உயிரை நீக்குதல். வாகை - வெற்றிபெற்றோர் அணியும் மாலை. ஆகெடுவீர்: இவளுடைய இந்நிலையைக் கண்டும் இதனை நீக்குதற்கு ஒன்றும் செய்யாமலிருத்தல் பற்றி இங்ஙனம் கூறினாள்; ஆ: இரக்கக் குறிப்பு. காமாந்தகர் - காமனை முன்பு எரித்து முடித்தவர்; மன்மதனால் வரும் துன்பத்தை நீக்கும் வன்மையுடையாரென்பது இத்தொடரில் தோற்றியது; கருத்துடையடைகொளி யணி. கண்ணுதலா ரென்றது, மன்மதனை இப்பொழுதும் அழித்தற்கேற்ற கருவியை யுடையாரென்றபடி; 648. ஏமாந்து இராமல் - சமயத்திலே ஏமாற்றத்தை உடையவராக இராமல்.
எடுத்து ஓதீரென்க.
610. தலைவி கூற்று; சந்திரோபாலம்பனம்.
ஒரு கலையையுடைய இப்பிறை. இத்தலத்திற் சாரூபம் பெறுபவர் ஒவ்வொருவருக்கும் அகிலேசர் கொய்து கொய்து கொடுப்பவும் வளர்கின்றதே; என்ன வியப்பு!
கடுக்கை - கொன்றை. சடைமுடியார்: எழுவாய், அடியார்க்கு - சாரூபம் பெற்றவர்களுக்கு. வளர்கின்றவா - வளர்கின்றவாறு என்ன வியப்பு! வெறுங் கூட்டில் - நல்லுயிர் போன உடலில்; என்றது தன்னுடலை. குறைந்த உயிரையுடைய மாதரைத் தேடுகின்ற மதிக்கொழுந்து; மதிக்கொழுந்து - பிறை.
இத் தீய செயலால் பிறைக்குக் கலைகள் குறையவில்லையே! என்ன வியப்பு என்றாள் தலைவி.
611. தோழி கூற்று.
கொழுதி - கிண்டி. அழுத - பிரிவாற்றாமல் அழுத. முந்நீர் - கடல். இளஞ்சேய் - முருகக் கடவுள்.
|