| எழுத வரிய திருமார்பி | | லிளஞ்சேய் சிறுசே வடிச்சுவடும் | | முழுது முடையாண் முலைச்சுவடு | | முடையார் காசி முதல்வர்க்கே. |
நேரிசை வெண்பா 612. | வரைவளைக்கும் பொற்றடந்தோண் மைந்தர்க் கிவரார் | | நிரைவளைக்கை யார்நகைக்கு நேராக் - கறையிற் | | குவிமுத்தம் வெண்ணிலவு கொப்புளிக்குங் கங்கை | | அவிமுத்தஞ் சென்றிறைஞ்சா தார். |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிவிருத்தம் 613. | ஆர்க்கும் படைவே ளரசிருப்பென் | | றஞ்சா தடிக ளருட்காசி | | ஊர்க்கும் புதுத்தோ ரணம்வைத்தா | | லுமக்கிங் கிவள்பேச் சுரைப்பாரார் |
காசிமுதல்வருக்கு, இத்தலைவி இடைவிடாமல் அழுது கொண்டிருத்தலைத் தெரிவிக்க வேண்டுமென்றபடி.
612. வரை - மேருமலையை. மைந்தர் - வலியுடைய அகிலேசர்; “மாவயர வன்றுரிசெய் மைந்தனிடமென்பர்” (தே. திருஞா.) வரம்பில்லா ஆற்றல் இறைவனுக்குரிய எண்குணங்களுள் ஒன்றென்பது இங்கே நினைத்தற் குரியது. இவரென்றது இறைஞ்சாதவர்களை. ஆரென்றது, இறைவருடைய திருவருளுக்குப் பாத்திரராகாரென்றபடி. நேரா - ஒப்பாக. கரையிற் குவிக்கப்படும் முத்தம். அவிமுத்தம் - காசியை.
இறைஞ்சாதவராகிய இவர் மைந்தர்க்கு ஆர்.
613. தோழி கூற்று.
வேள் - மன்மதன்; எழுவாய். அரசிருப்பு என்று அஞ்சாது தேவரீருடைய இராசதானி என்றெண்ணிப் பயப்படாமல் அரசிருப்பைப் படை வீடென்றும் கூறுவர் (694). ஊர்க்கும் - ஊரினிடத்தும்; உம்மை: உயர்வுச் சிறப்பு. தோரணம் வைத்தல்: ஓரூரை ஒருவர் தம் வசப்படுத்திக் கொண்டு அங்கே செய்யும் ஒருவகைக் கொண்டாட்டம்; இது வசப்படுத்தலென்னும் பொருளில் இங்கே அமைந்தது; “தொல்லைமா நகரு நாடுந் தோரணம் வைக்கச் சொற்றி” (வி. பா. சூதுபோர்ச். 198); “காடெ லாமர சாடைசி செய் தாமரைக் கண்ணன்ப் புதுக் கானும், நீடு தோரணம் வைத்தென”
|