| வார்க்குங் குமப்பூண் முலைச்சுவட்டை | | வளையென் றோடி வளைந்துசுற்றிப் | | பார்க்குந் துளைமுள் ளெயிற்றுரகப் | | |
கட்டளைக் கலிப்பா 614. | தண்ணு லாம்பொழிற் காசித் தெருவினீர் | | தரித்தி டுந்தவக் கோலமுஞ் சூலமும் | | பெண்ணொ டாடுமப் பிச்சனுக் கொத்தலாற் | | பிச்சி யாரெனும் பேர்தரித் தாடுவீர் | | வெண்ணி லாமுகிழ்க் குங்குறு மூரலால் | | வீணி லேயெம் புரத்தெரி யிட்டநீர் | | கண்ணி னாலுமிக் காமனைக் காய்ந்திடிற் | | கடவு ணீரென் றிறைஞ்சுதுங் காணுமே. |
615. | காணுங் காணு நதிகளெல் லாம்புனற் | | கங்கை யேயங் குளதெய்வம் யாவையும் | | தாணு வெங்க ளகிலேச ரேமற்றைத் | | தலங்கள் யாவுந் தடம்திற் காசியே |
(காஞ்சிப். நகரேற்றுப். 82.) மன்மதன் தேவரீரது இராசதானியென்று அஞ்சாமல் இங்கே புதுத் தோரணம் வைத்துத் தன் அதிகாரத்தைச் செலுத்துவானாயின், இவளது துயரைத் தேவரீர்பால் துணிந்து வந்து சொல்பவர் யாரென்றாள். வளை - புற்று; இச்சொல் அளையென்றும் வழங்கும். முலைச்சுவட்டைப் புற்றென்று பாம்பு எண்ணுதல்: 546, 673. உரகப் பணியீர் - பாம்பாகிய ஆபரணத்தை யுடையீர். 614. பிச்சியார் - தவக்கோலம் பூண்ட சைவசமயப் பெண். இவள் சைவச்சின்னம் தாங்கிச் சூலமு மேந்தியிருத்தல் மரபு; பெண்ணொடு - உமாதேவியாரோடு. பிச்சன் - சிவபெருமான்; பித்தனென நூல்களில் வழங்கும்; “பித்தாபிறை சூடி” (தே. சுந்தர.) தரித்து - தாங்கி, பிச்சனுக்கு ஒத்தல்: 136. ஆடுதல், பொதுத்தன்மை. சிவபெருமான் குறுமூரலால் புரத்தையும் கண்ணால் மன்மதனையும் எரித்தார்; புரம் - திரிபுரம், உடம்பு (538). கண்ணினாலும்: உம்மை, இறந்தது தழுவியது. கடவுளென்றது சிவபெருமானை.
615. கங்கையே - கங்கை யாகுமா; ஏகாரம் எதிர்மறை; பின்வருவனவற்றிற்கும் இங்ஙனமே பொருள் கொள்க. ஆசை - எனக்குள்ள ஆசை.
|