பக்கம் எண் :

காசிக் கலம்பகம்475

கட்டளைக் கலித்துறை
 
623.
திருக்கோலங் கொண்டநற் றேன்மொழியாளெண்டிசையினுநின்
உருக்கோல மேகண்டு கண்டிலன் போலு மொழுகுநறை
மருக்கோல நீலக் குழல்சே ரவிமுத்த வாணதொல்லை
இருக்கோல மிட்டுண ராயெங்கு மாகி யிருப்பதுவே.    
(25)

624.
    இருகுங் குமக்குன்றும் பீர்பூப்பக்
        காம வெரியினினின்
    றுருகும் பசும்பொன்னுக் கோர்மாற்றுண்
        டேலுறை யாய்தொடுத்துச்
    செருகு நறுங்கொன்றை தேன்பிழிந்
        தூற்றச் சிறைச்சுரும்பர்
    பருகும் பொலஞ்சடை யாய்காசி
        வாழ்முக்கட் பண்ணவனே.        
(26)

கலிநிலைத்துறை
 
625.
பண்ணேர் வேதம் பாடிய காசிப் பதியாயிப் 
பெண்ணே ரொருவ னெய்கணை யைந்தும் பெய்தானால் 
உண்ணேர் நின்றா யின்னரு ளாலென் னுயிரன்னாள் 
கண்ணேர் நிற்றற் கொல்கி யொழிந்த கழுநீரே.        
(27)

    623. தோழி கூற்று.

    திருமகளின் அழகைக்கொண்ட தேன்மொழியாள்: தலைவி. உருக்கோலம் - உருவெளித்தோற்றத்தை. போலும்: அசைநிலை. கோலத்தையணிந்த நீலக்குழல்; விசாலாட்சியம்மை; கோலம் - குவளைமலர். இருக்கு - வேதம். இட்டும் உணராயென உம்மை விரிக்க. நீ எங்குமாகி இருப்பதைத் தேன்மொழியாள் கண்டிலள்; இஃது என்ன பேதைமை? 642.

    624. தோழி கூற்று. பீர் - பசலைநிறம்: இது தலைவன் பிரிவாலுண்டாவது. பொன் - தலைவி. மாற்று - பரிகாரம். பொன்னுக்குரிய மாற்று. உரையாய் - சொல்லுவாய்; மாற்றுப் பார்த்தற்கு உரைத்துப் பார்ப்பாயென்று வேறொரு பொருள் தோற்றியது.

    பண்ணவனே, பொன்னின் நோய் தீருதற்கு ஒரு மருந்து இருந்தால் அதனைக் கட்டளையிட்டருள வேண்டும்.

    625. தோழி கூற்று. அகிலேசரே, மன்மதன் இவள்மீது தன் ஐந்து அம்புகளையும் தொடுத்துவிட்டான்; அவற்றுள் நான்கு பாணங்கள் மட்டும் தாம் செய்யவேண்டிய துன்பங்களை முறையே செய்துவிட்டன. கொலைப்பாணமாகிய கழுநீர் இவள் கண்ணுக்கு முன்னே வருவதற்கு அஞ்சி ஒழிந்தது அதற்குக் காரணம் தேவரீரது திருவருளே.

    பண் நேர் - பண்ணைக்கொடுக்கும்; நேர்தல் - கொடுத்தல். வேதத்திலிருந்து சங்கீதம் உண்டாயிற்றென்பது நூற்றுணிபு. ஒருவன் - மன்மதன். ஐந்தும்: உம்மை முற்றும்மை. உள் நேர் நின்றாய் - உள்ளே உயிர்க்கு உயிராய் நின்ற தேவரீருடைய. உயிரன்னாளுடைய கண்களுக்கு. கழுநீர்