நேரிசை வெண்பா 630. | பாவலரு நாவலரும் பண்மலரக் கண்மலரும் | | காவலரு மேடவிழ்க்குங் காசியே - தீவளரும் | | கஞ்சக் கரத்தான் கலைமறைக்கு நாயகமாம் | | |
631. | அகமே யவிமுத்த மையரிவர்க் காகம் | | சகமேழு மீன்றெடுத்த தாயே - மிகமேவும் | | எண்ணம் பரமே யெமக்களித்தன் முச்சுடரும் | | |
தாழிசை 632. | கலைமதியின் கீற்றணிந்த காசியகி லேசர் | | சிலைமதனைக் கண்ணழலாற் செற்றனர்கா ணம்மானை |
“கண்மூடி மௌனியாகி” (தாயுமானவர் பாடல்). உனக்கு உள்ள பாவம் யாது? அஃது இரங்கத்தக்கது; பாவம் - தீவினை.
நெஞ்சே, உன்னுடைய பேதைமையை ஒழித்து அகிலேசரைத் தியானஞ்செய் என்றபடி.
630. பா - அலரும் - பாக்கள் தோன்றப்பெற்ற. நாவலர் - புலவர். கள் - விரியும் சோலையிலுள்ள பூக்களும். வண்டுகள் பண்ணை விரித்துப் பாடுதலால் ஏடுகளை அவிழ்க்கும். ஏடு அவிழ்க்கும் - (நாவலர்) பனையேடுகளாலாகிய புத்தகங்களைக் கட்டவிழ்க்கும், (கா அலர்) இதழ்களை மலரச்செய்யும்; ஏடு: ஆகுபெயர். கஞ்சக் கரத்தான் - தாமரை மலரைப்போன்ற திருக்கரத்தை உடையார். அஞ்ச அக்கரம் - ஸ்ரீ பஞ்சாட்சரம்.
631. ஐயர் இவர்க்கு அகம் அவிமுத்தம்; அகம் - இருப்பிடம். ஆகத்தின்கண் ஏழுசகத்தையும் ஈன்றெடுத்த தாயே உள்ளாள் (628:2); ஆகம் - திருமேனி. எமக்கு அளித்தல் யாவராலும் மிக விரும்பும், எண்ணப்படும் அழகிய பரத்தை; பரம் - முத்தி; மேவும்பரம், எண்ணப்படும் பரமென்க. முச்சுடரும் கண்களாகும். அம்பரம் கலை - திசையே ஆடை; திகம்பரரென்னும் திருநாமத்தை நினைக்க.
632. சிலைமதனைக் கண்ணழலாற் செற்றனர்காணம்மானை யென்பது ஒரு பெண்ணின் கூற்று. மன்மதனை வென்றவர் பெண்ணாசையின்றி யிருத்தல் வேண்டும்; உமாதேவியாருக்கு அகிலேசர் தம் திருமேனியிற் பாதியை வழங்கியது அதற்கு மாறன்றோ வென்பது மற்றொருத்தியின் வினா. அப்
|