பக்கம் எண் :

478குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

சிலைமதனைக் கண்ணழலாற் செற்றனரே யாமாகின்  
மலைமகட்குப் பாகம் வழங்குவதே னம்மானை  
  வலங்காரோ வப்பாலு மாலானா லம்மானை.      
(34)

கட்டளைக் கலித்துறை
633.
அம்மனை தம்மனை யாத்திருக் கோயி லவிமுத்தமா
எம்மனை யாய்த்தந்தை யாயிருந் தாரடிக் கீழிறைஞ்சீர்
நம்மனை மக்களென் றேக்கறுப் பீருங்க ணாளுலந்தாற்
சொம்மனை வைத்தெப் படிநடப் பீர்யமன் றூதரொடே.
(35)

கட்டளைக் கலிப்பா
634.
தூது கொண்டுந் தமைத்தோ ழமைகொண்ட
   தொண்டர் தண்டமிழ்ச் சொற்கொண்ட குண்டலக்
காது கொண்டெங் கவிதைகொண் டாட்கொண்ட
   காசி நாதர் கருத்தே தறிகிலேம்

பாலும் மாலாயிருதால் வழங்காரோவென்பது மூன்றாமவளின் விடை. அவ்விடை இரு பொருளுடையது; மன்மதனை யெரித்த பின்னும் காம மயக்கமுடையவராயின் என்று பொருள்பட்டு வினாவுக்கேற்ற விடையுடையதாயிற்று; அந்த பக்கமும் திருமாலானா லென்பது இயல்பான பொருள். சிவபெருமான் தம் ஒரு பாதியில் திருமாலைக் கொண்டிருப்பதை நினைந்து கூறினாள்.

    633. அம்மனை - உலகிற்குத் தாயாகிய உமாதேவியார் (82). தம்மனையா - தம்முடைய தேவியாக. எம் அன்னையாயும் தந்தையாயும் இருந்தார்; அப்பனீ யம்மை நீ” (தே.) இருந்தவர் அகிலேசர். அவரது அடியின் கீழ். ஏக்கறுப்பீர் - அவர்களிமீதுள்ள ஆசையால் ஈடுபட்டு நிற்பீர்; “உடையார்முன் னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்” (குறள், 395, பரிமேல்.) நாள் உலந்தால் - வாழ்நாள் முடிவுபெற்றால். சொம் - சொத்துக்களை (361 : 2.)

    634. தொண்டர் - சுந்தரமூர்த்தி நாயனார்; அவருக்கு வழங்கும் ‘தம்பிரான் தோழர்’ என்னும் திருநாமமும், “ஏழிசையா யிசைப்பயனா யின்னமுதா யென்னுடைய, தோழனுமாய்” (தே. சுந்தர.) என்னும் அவர் வாக்கும் இங்கே அறிதற்குரியன. குண்டலக்காதென்ற அடைமொழி குண்டலங்களாகவுள்ள கம்பளாசுவதரரது இசையைக் கேட்கும்