பக்கம் எண் :

காசிக் கலம்பகம்479

போது கொண்டொரு பச்சிலை கொண்டுதாம்
   பூசை செய்திலர் புண்டரி கப்பதம்
ஏது கொண்டு கொடுப்பர் கொடுப்பரே
   லிருவ ருக்குமற் றென்படு நெஞ்சமே.    
(36)


நேரிசை வெண்பா
635.
ஏடவிழ்பொற் கொன்றையகி லேசரன்பர்க் கேயிரும்பை 
ஆடகமாக் கிக்கொடுத்தோ மவ்வளவோ - நீடுதிறல் 
காட்டுமிமை யோர்க்கிருப்புக் கற்கனக மாக்கியண்ட 
ஓட்டினையும் பொன்னாக்கி னோம்.    
(37)

காதென்னும் குறிப்பையுடையது. இழிந்த என் கவிதை என்று சொல்லாற்றலால் விரித்துக்கொள்க. மிகப் பெரிய சுந்தரமூர்த்தி நாயனாரது பாடல்களைக் கேட்டருளிய திருச் செவிகளால் மிகத் தாழ்ந்த சிறியேனுடைய பாடல்களையும் ஏற்றுக் கொண்டருளியது இறைவனது எளிமையைப் புலப்படுத்துமென்றபடி. இத்தலத்தில் இறந்தோர் இறைவன் திருவடியைப் பூசை செய்திலர்; இறந்த மாத்திரத்தில் சாரூபம் பெறுவர். யாதொரு காரணமுமின்றி அவர்களுக்கு எளிதில் நற்பதவி யளித்தால் நெடுங்காலம் வருந்திப் பூசித்துத் தேடியிளைத்து நிற்கும் பிரமதேவரும் திருமாலுமாகிய இருவரும் எத்துணை வருத்த முறுவர்?

    635. இரசவாதம் புரியும் சித்தர் ஒருவர் கூற்றாக அமைந்தது. இரசவாதத் தொடர்புடைய ஒருபொருளும் இயல்பான பொருளொன்றும் இதில் ஒருங்கே அமைந்தன.

    ஏடு - இதழ். அன்பர்க்கு - திருமாலுக்கு; சிவபெருமான் திருநாமங்களுள் ‘முகுந்தப்பிரியர்’ என்பது ஒன்று. இரும்பை ஆடகமாக்கி கொடுத்தோம் - இரும்பென்னும் உலோகத்தைப் பொன்னாக்கித் தந்தோம்; காளிங்கனென்னும் பாம்பின் பெரிய படத்தை ஆடுதற்குரிய இடமாக்கிக் கொடுத்தோம்; “யாமவர்க்கிரும்பை யாடகமாக்கினம்” (திருவரங்கக். 42). (பி-ம்.) ‘இரும்பை யாடகம்’. இமையோர்க்கு - தேவர்க்கு. இருப்புக்கற்கனகமாக்கி - இரும்புமலையைப் பொன்னாக்கி, இருப்பிடத்தை மேருமலையாக்கி; தேவர்களுக்கு இருப்பிட மாதல் பற்றி மேருமலை சுராலயமென வழங்கும். அண்டத்தின் ஓடு பொன்னிறமாகவுள்ள தென்பர்.