நேரிசை யாசிரியப்பா 636. | பொன்னுருக் கன்ன பூந்துணரக் கொன்றையும் | | வெள்ளிமுளை யன்ன விரிநிலாக் கொழுந்தும் | | காந்தண் மலர்ந்தன்ன பாந்தளி னிரையும் | | திரைசுழித் தெறியும் பொருபுனற் கங்கையில் | 5. | வெள்ளிதழ்க் கமலம் வள்ளவாய் விரித்தென | | முழுநகை முகிழ்க்குங் கழிமுடை வெண்டலை | | தோலடிச் செங்காற் பால்புரை வரிச்சிறைக் | | கிஞ்சுக மலர்ந்த செஞ்சூட் டெகினத் | | துருவெடுத் தகல்வான் றுருவியுங் காணாத் | 10. | தொன்மறைக் கிழவநின் சென்னிமற் றியானே | | கண்டுகொண் டனனிக் கடவுண்மா முடியெனப் | | பெருமகிழ் சிறப்பக் குரவையிட் டார்த்து | | வெள்ளெயி றிலங்க விரைவிற் சிரித்தெனப் | | பெருவியப் பிழைக்கு மெரிபுரை சடையோய் | 15. | ஆள்வழக் கறுக்கும் வாளமர்த் தடங்கண் | | மின்னுழை மருங்குற் சின்மொழி மகளிர் |
636. (அடி, 1-14.) இறைவனது சடைமுடியிலிருக்கும் பிரமனது தலை பிரமனைப் பார்த்து, ‘நீ காணாத திருமுடியை யான் கண்டேன்’ என்று கூறிப் பரிகாசம் செய்கின்றமை கூறப்படும்.
(1) கொன்றை மலருக்கு உருக்கிய பொன் உவமை. (2) நிலாக் கொழுந்து - பிறை.
(3) பாந்தள் - பாம்பு.
(6) வெண்டலை: எழுவாய்.
(8) கிஞ்சுகம் மலர்ந்த - முள்ளுமுருங்கைப் பூவைப்போல மலர்ந்த. எகினம் - அன்னம்.
(7-8) “பானிற வரிச்சிற, கன்னம்” (திரிமுகப்பாசுரம்).
(9) துருவியும் - தேடியும்.
(10) மறைக்கிழவ - பிரமனே. (பி-ம்.) ‘கிழவ சென்னிமற்’. நின் சென்னி யென்றமையின் அதனைச் சிவபிரானாற் கிள்ளப்பட்ட தலையென்று கொள்க.
(12) குரவை - குரவைப்பாட்டு.
வெண்டலை (6), சிரித்தெனப் (13) பெரு வியப்பிழைக்கும் சடையோய்.
(15-26) காசியிலுள்ள மகளிர் கமுகமரத்திற் கட்டிய ஊசலிலாடுதல் கூறப்படும்.
(16) மின் நுழை - மின்னலைப் போலச் சிறிய. (பி-ம்.) ‘மின்னிழை’.
|