| ஒழுகொளி மிடற்றி னழகுகவர்ந் துண்டெனக் | | கயிறு கொண் டார்க்குங் காட்சித் தென்ன | | மரகதங் காய்த்துப் பவளம் பழுக்கும் | 20. | கமஞ்சூற் கமுகின் கழுத்திற யாத்து | | வீசொளிப் பசும்பொ னூசலாட் டயர்தரப் | | பருமணிக் கமுகின் பசுங்கழுத் துடைத்து | | திரைபடு குருதித் திரடெறித் தென்ன | | முழுக்குலை முரிந்து பழுக்காய் சிதறும் | 25. | மங்குல்கண் படுக்கு மதுமலர்ப் பொதும்பர் | | கங்கைசூழ் கிடந்த காசி வாணா | | ஐவளி பித்தெனு மவைதலை யெடுப்ப | | மெய்விட் டைவருங் கைவிடு மேல்வையில் | | மாமுத றடிந்த காமரு குழவியும் | 30. | பொழிமதங் கரையு மழவிளங் களிறும் | | மூண்டெழு மானம் பூண்டழுக் கறுப்ப | | இடக்கையி னணைத்துநின் மடித்தலத் திருத்தி | | உலகமோ ரேழும் பலமுறை பயந்தும் | | முதிரா விளைமுலை முற்றிழை மடந்தை |
(16-8) மகளிர் கமுகமரங்கள் தம் கழுத்தின் அழகைத் திருடியனவென்று கருதி அவற்றைத் தண்டிப்பார் போல அவற்றில் கயிறுகளைக் கட்டி ஊசலாடுகின்றன ரென்பது கருத்து.
(19-20) “எண்ணார் முத்த மீன்று மரகதம் போற்காய்த்துக், கண்ணார் கமுகு பவளம் பழுக்குங் கலிக்காழி” (தே. திருஞா.); “கருங் கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று காயெல்லா மரகதமாய்ப் பவளங்காட்ட” (பெரிய திருமொழி, 2, 10:7).
(21) (பி-ம்.) ‘ஊசலாட் டயரவப்’. (24) பழுக்காய் - பாக்கு.
(25-6) பொதும்பருங் கங்கையும்; பொதும்பர் - சோலை.
(27-40) இத்தலத்தில் இறந்தோருக்கு அகிலேசர் பிரணவோபதேசம் புரியும் செயல் விரித்துக் கூறப்படும்.
(28) ஐவர் - ஐம்பொறிகள்; “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மே லுந்தி” (தே. திருஞா.)
(29) குழவி - முருகக் கடவுள்.
(30) களிறு - விநாயகர்.
(31) அழுக்கறுப்ப - பொறாமை கொள்ள.
(34) மடந்தை - விசாலாட்சியம்மை.
|