கட்டளைக் கலித்துறை 10. | இரைக்கு நதிவைகை பொய்கைபொற் | றாமரை யீர்ந்தண்டமிழ் | வரைக்கு மலைதென் மலயம | தேசொக்கர் வஞ்சநெஞ்சைக் | கரைக்குங் கனகள்வி கர்ப்பூர | வல்லிக்குக் கற்பகத்தால் | நிரைக்கும்பொற் கோயி றிருவால | வாயுமென் னெஞ்சமுமே. | | | | | | | |
நேரிசை வெண்பா 11. | நெஞ்சே திருக்கோயி னீலுண் டிருண்டகுழல் | மஞ்சேந் தபிடேக வல்லிக்கு - விஞ்சி | வருமந் தகாவென் வழிவருதி யாலிக் | கருமந் தகாவென் கருத்து. | | | |
கட்டளைக் கலித்துறை 12. | கருவால வாய்நொந் தறமெலிந் | தேற்கிரு கான்மலரைந் | தருவால வாய்நின்ற தொன்றுத | வாய்வன் றடக்கைக்குநேர் | | | |
வைத்துக்கொண்டிருந்தாற்போதும்; நீ ஏழையாதலால் குடிக்கூலி வேண்டேன்’ என ஒரு பொருள் தொனித்தது. “தொழும்ப ருளக்கோயிற்கேற்றும் விளக்கே” (குமர. 62) என்பது இங்கே நினைத்தற்குரியது.
10. இரைக்கும் - முழங்கும். கர்ப்பூரவல்லிக்கு நதி வைகை. இங்ஙனமே ஏனையவற்றிற்கும் கூட்டியுரைக்க. பொற்றாமரை - பொற்றாமரைத் தீர்த்தம். வரைக்கும் - தன்னிடத்திலே அகப்படுத்திக்கொண்ட; வரைதல் - கொள்ளுதல். தென்மலயம் - பொதியில். கள்வி: இந்நூல் 3-ஆம் செய்யுளைப் பார்க்க. (பி-ம்.) ‘கற்பகத்தார்’. ‘கற்பகந்தார்’. கற்பகத்தாரென்னும் பாடத்திற்குத் தேவர்களென்னும் பொருள் கொள்க. 11. வல்லிக்கு நெஞ்சே திருக்கோயில். நீல் - நீலம்; கருமை. குழலாகிய மஞ்சை; மஞ்சு - மேகம். விஞ்சி - மீறி. அந்தகா - யமனே. கருமம் தகா - உன் செயல்கள் தக்கனவல்ல. கருத்து என் - உன்னுடைய உட்கோள் யாது? (பி-ம்.) ‘தகாவுன் கருத்து’.
12. அவாய் கருவால் நொந்து அற மெலிந்தேற்கு - மண் முதலியவற்றை ஆசைப்பட்டு அதன்பயனாக வந்த பிறவியால் துன்புற்று மிக இளைப்புற்ற எனக்கு. இரண்டு கான்மலரையுடைய ஐந்தருவாகி ஆல மரத்தினிடத்தே நின்ற பரம்பொருளாகிய ஒன்றை; சிவத்தை. உதவாய் -
|