பக்கம் எண் :

மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை523

நேரிசை வெண்பா
7.
கடம்பவன வல்லிசெல்வக் கர்ப்பூர வல்லி
மடந்தை யபிடேக வல்லி - நெடுந்தகையை
ஆட்டுவிப்பா ளாடலிவட் காடல்வே றில்லையெமைப்
பாட்டுவிப்ப துங்கேட் பதும்.

கட்டளைக் கலித்துறை
8.
பதுமத் திருவல்லி கர்ப்பூர வல்லிநின் பாதபத்ம
மதுமத் தொடுந்தம் முடிவைத்த வாமது ரேசரவ
ரிதுமத்தப் பித்துமன் றேழைமை முன்ன ரிமையவர்கைப்
புதுமத் தினைப்பொற் சிலையென் றெடுத்த புராந்தகர்க்கே.

நேரிசை வெண்பா
9.
தகுமே கடம்பவனத் தாயேநின் சிற்றி
லகமேயென் னெஞ்சகம தானான் - மகிழ்நரொடும்
வாழாநின் றாயிம் மனையிருண்மூ டிக்கிடப்ப
தேழாய் விளக்கிட் டிரு.

“முருகுயிர்க்கு நறுந்தெரியன் மொய்குழலின் மையுண்கட், பொருகயற்குன் றிருமேனி புதுவெள்ளப் புணரியே” (குமர. 537). வெள்ளிமன்று - மதுரையிலுள்ள வெள்ளியம்பலம்.

7. அபிடேகவல்லி: (குமர. 2). நெடுந்தகையை - சிவபெருமானை. சிவபெருமான் ஐந்தொழினடனம்புரிதற்கு அவரது திருவருளே காரணமாதலின், அத்திருவருளாகிய அம்பிகையை ஆட்டுவிப்பாளென்றார்; “சிவமெனும் பொருளுமாதி சத்தியொடு சேரி னெத்தொழிலும் வல்லதாம், அவள்பி ரிந்திடினியங்கு தற்கு மரிது” (சௌந்தரியலகரி, 1) என்பதுங் காண்க. ஆடல் ஆட்டுவிப்பாள். எம்மைப் பாடச்செய்வதும் அதனைத்தான் கேட்பதுமின்றி வேறு திருவிளையாட்டுத் தனக்கில்லை.

    8. பதுமத்திருவாகிய வல்லி. வல்லி: அண்மை விளி. மதுமத்து - ஊமத்தை. அதனோடு நின்பாத தாமரையை வைத்தது என்ன ஆச்சரியம். இது மத்தப் பித்தும் அன்று - இது மனமயக்கத்தால் வந்த பித்தும் அன்று. ஏழைமை - அறியாமை. மத்தென்றது மேருமலையை. புராந்தகர்க்குப் பித்தும் அன்று; ஏழைமை யென்க. புராந்தகரென்றது மத்தை வில்லாக எடுத்த செயற்குக் காரணமாகிய திரிபுர சங்காரத்தை நினைப்புறுத்தியது. அங்ஙனம் எடுத்த அது பயன்பட்டிலது.

    9. என் நெஞ்சகம் நின் சிற்றிலகமானால். இம்மனை இருள் மூடிக்கிடப்பது; ஆதலின், இதன்கண் விளக்கிட்டு இருக்க வேண்டும். இருள் - அறியாமை. ஏழாய் - பெண்ணே. விளக்கு - ஞானம். ‘வீட்டில் விளக்கு