பக்கம் எண் :

522மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை

கட்டளைக் கலித்துறை
4.
குணங்கொண்டு நின்னைக் குறையிரந்
   தாகங் குழையப்புல்லி
மணங்கொண் டவரொரு வாமங்கொண்
    டாய்மது ரேசரவர்
பணங்கொண் டிருப்ப தறிந்துங்கொள்
    ளாயம்மை பைந்தொடியார்  
கணங்கொண் டிறைஞ்சு நினக்குமுண்
    டாற்பொற் கனதனமே.

நேரிசை வெண்பா
5.
கனமிருக்குங் கந்தரரர்க்குன் கன்னிநா டீந்தென்  
தினமிரப்ப தோவொழியார் தேனே - பனவனுக்காப்  
பாமாறி யார்க்குனைப்போற் பாரத் தனமிருந்தாற்  
றாமாறி யாடுவரோ தான்.  

கட்டளைக் கலித்துறை
6.
தானின் றுலகு தழையத் தழைந்த தமிழ்மதுரைக்
கானின்ற பூங்குழற் கர்ப்பூர வல்லி கருங்கட்செய்ய
மீனின் றுலாவி விளையா டுவதுவிண் ணாறலைய
வானின்ற தோர்வெள்ளி மன்றாடு மானந்த மாக்கடலே.

வரது வாமபாகத்தைப் பெற்றமையால் உடம்பிரு கூறாக்கினாள் என்றார். கொடியார் - கொடி போன்றவர், கொடியவர்; “எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த, முற்றிழையாள் வாட முறுவலிக்கும் ............. கொடியார்க்கு முண்டோ குணம்” (தண்டி, 48, மேற்.) (பி-ம்.) ‘கொடியார்க்கிலை’.

    4. மணங் கொண்டவர் - சிவபிரான். பணம் - பாம்பின் படம், திரவியம். கொள்ளாய் - வாங்கிக்கொள்ளமாட்டாய். பொற்கனதனம் - பொலிவுபெற்ற கனத்த நகில், பொன்னாகிய மிக்க செல்வம்.

    5. கனம் - மேகத்தின் கரியநிறம். கந்தரர் - திருக்கழுத்தையுடைய கடவுள். கன்னிநாடு - பாண்டிநாடு. ஈந்து என் - நீ கொடுத்ததனால் உண்டான பயன் யாது? பனவனுக்கா பா மாறியார் - தருமியென்னும் பிராமணனுக்காகத் தம் பாட்டை விற்றவர். தனம் - நகில், பொருள், மாறி ஆடுவரோ - கால் மாறி ஆடுவரோ. பணமில்லாமையே அவர்க் கூத்திற்குக் காரணமென்றார்.