பக்கம் எண் :

மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை521


இரட்டை மணிமாலை

நேரிசை வெண்பா
1.
கார்பூத்த கண்டத்தெங் கண்ணுதலார்க் கீரேழு
பார்பூத்த பச்சைப் பசும்கொம்பே - சீர்கொள்
கடம்பவனத் தாயேநின் கண்ணருள்பெற் றாரே
இடம்பவனத் தாயே யிரார்.

கட்டளைக் கலித்துறை
2.
இராநின் றதுஞ்சொக்க ரெண்டோள்
   குழைய விருகுவட்டாற்
பொராநின் றதுஞ்சில பூசலிட்
   டோடிப் புலவிநலம்
தராநின் றதுமம்மை யம்மண
   வாளர் தயவுக்குள்ளாய்
வராநின் றதுமென்று வாய்க்குமென்
   னெஞ்ச மணவறையே.

நேரிசை வெண்பா
3.
மதம்பரவு முக்கண் மழகளிற்றைப் பெற்றுக் 
கதம்பவனத் தேயிருந்த கள்வி - மதங்கன் 
அடியார்க் குடம்பிருகூ றாக்கினாள் பார்க்கிற் 
கொடியார்க் குளகொல் குணம். 

    1. கடம்பவனத்தாயே - கடம்பவனமாகிய மதுரையில் எழுந்தருளிய அன்னையே. இடம்ப வனத்தாய் இரார் - டம்ப மிகுதியின் கண்ணே உள்ளவராய் இரார்; டம்பம் பன்னிரண்டு குற்றங்களுள் ஒன்று.

    2. இரு குவடு - நகில்கள். அம்மே, நீ நின் கணவரோடு புரியும் திருவிளையாடல்களை என்மனம் எப்பொழுதும் நினைக்கும்.

    3. மழகளிறு - விநாயகர். மதங்கன் அடியார்க்கு - பாண பத்திரருக்கு அடியாராகிய சிவபெருமானுக்கு; சொக்கநாதர் பாணபத்திரரின் பொருட்டு விறகு விற்றதை நினைந்து கூறியது இது. தவஞ்செய்து இறை