பக்கம் எண் :

520குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

708.
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ்
    ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர்
    யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ
    டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே
    சகல கலாவல்லியே.
(9)

709.
மண்கண்ட வெண்குடைக் கீழாக
    மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய்
    வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்
    டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ
    சகல கலாவல்லியே.
(10)

சகலகலாவல்லி மாலை முற்றிற்று.


708. சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராக இருக்கும் உண்மையறிவு. அவ்வறிவே உருவாக இருப்பவள் கலைமகள். நின்னை நினைப்பவர் யார் - நின்னை நினைக்கும் ஆற்றலுடையவர் யார்; நீ மனத்தால் நினைத்தற்கு அரியா யென்றபடி. துதிக்கை நிலந் தோய்தல் பிடிக்கு உத்தம இலக்கணம்; “ஈர்ந்துநிலந்தோயு மிரும்பிடித் தடக்கையின்” (சிறுபாண். 19). (பி-ம்.) ‘பதாம்புயத் தாளே.

709. இப்பாட்டில் பாதுஷாவின் அன்பு தமக்குக் கிடைக்க வேண்டுமென்னும் விருப்பத்தைக் குறிப்பித்தனர்.

    மண்கண்ட - உலகு முழுவதையும் நிழற்றிய. பண்ணென்றது இங்கே செய்யுளை. படைப்போன் - பிரமதேவர். கண்கண்ட தெய்வம் - பிரத்தியட்சமான பலனைத் தரும் தெய்வம்.