பக்கம் எண் :

526குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கட்டளைக் கலித்துறை
16.
நாவுண்டு நெஞ்சுண்டு நற்றமி
   ழுண்டு நயந்தசில
பாவுண் டினங்கள் பலவுமுண்
   டேபங்கிற் கொண்டிருந்தோர்
தேவுண் டுவக்குங் கடம்பா
   டவிப்பசுந் தேனின்பைந்தாட்
பூவுண்டு நாரொன் றிலையாந்
   தொடுத்துப் புனைவதற்கே.  

நேரிசை வெண்பா
17.
புனைந்தாள் கடம்பவனப் பூவைசில பாவை
வனைந்தாளெம் வாயும் மனமும் - தினந்தினமும்
பொற்பதமே நாறுமவள் பூம்பதமென் றேநமது
சொற்பதமே நாறுஞ் சுவை.

கட்டளைக் கலித்துறை
18.
சுவையுண் டெனக்கொண்டு சூடுதி
   யான்மற்றென் சொற்றமிழ்க்கோர்

புகவே பூரவல்லியும் என் நாவிற் புகுந்தாள்; பூரவல்லி - கலைமகள்; பூரவாஹினி யென்பது அவள் திருநாமம். அம்பிகை திருவருள் உண்டாயின் கல்வியறிவு உண்டாமென்றபடி.

    16. இனங்கள் - பாவினங்கள். பசுந்தேன் - மீனாட்சியம்மை. பூவிருந்தும் நாரில்லை யென்றது ஒரு நயம்; நார் - மாலைகட்டும் நார்; “அன்பெனு நார் தொடுத்தலங்கல் சூட்ட” (திருவிளை. கடவுள். 16).

    17. சில பாவைக் கடம்பவனப்பூவை புனைந்தாள் - எளியேம் இயற்றிய சில செய்யுட்களை மீனாட்சியம்மை அணிந்தருளினாள். (பி-ம்.) ‘சில பூவை’. எம்வாயும் மனமும் வனைந்தாள் - எம்முடைய வாயையும் மனத்தையும் தன் இருப்பிடமாக அலங்கரித்தாள்; எழுந்தருளி யிருந்தாளென்றபடி. (பி-ம்.) ‘என் வாயும்’. தினந்தினமும் அவள் பூம்பதம் பொற்பதமே நாறும் என்றேம் - நாள்தோறும் அவளுடைய மலரடி பொன்னுலக முழுதும் நறுமணம் பரப்பு மென்று துதித்தேம். அதனால் நம்முடைய சொல்லாகிய பதம் சுவை மணக்கும். இறைவியைத் தோத்திரம் புரிதலால் எம் செய்யுள் சுவையுடைய தாயிற்றென்றபடி. வனைந்து ஆள் எம்வாயும் மனமும் அவளது பொற்பதமே நாறுமென்று கூட்டிப் பொருள் செய்தலும் பொருந்தும் (பி-ம்.) ‘பூம்பத மன்றே’

    18. என் பாட்டைச் சூடுவாயாக. நவை - குற்றம். அற - மிக. மூன்றவை; அவை: பகுதிப் பொருள் விகுதி. சத்தி சிவமென்னும்