| நவையுண் டெனவற நாணுதி | போலு நகைத்தெயின்மூன் | றவையுண் டவரொ டருட்கூடல் | வைகுமம் மேற்சொற்பொருட் | கெவையுண்டு குற்ற மவையுண்டு | நீவி ரிருவிர்க்குமே. | | | | | |
நேரிசை வெண்பா 19. | விண்டிருந்த பொற்கமல மீதிருந்த பொன்னினையும் | கொண்டிருந்து குற்றேவல் கொள்ளுமாற் - றொண்டரண்டர் | தேங்காவில் வீற்றிருப்பத் தென்மதுரைக் கேகடப்பம் | பூங்காவில் வீற்றிருந்த பொன். | | | |
கட்டளைக் கலித்துறை 20. | பொற்பூர வல்லி கமலத்த ளேகொல் புகுந்தகமும் | வெற்பூர வல்லி பிறந்தக மும்மது மீட்டுமென்னே | அற்பூர வல்லியென் வன்னெஞ்சக் கஞ்சத்தெம் மையனொடும் | கற்பூர வல்லி குடிபுகுந் தேநின்ற காரணமே. | | | |
மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை முற்றிற்று.
இருவரும் முறையே சொல்லாகவும் பொருளாகவும் இருத்தலின், இங்ஙனம் கூறினார் (திருவிளை. இடைக்காடன், 10). என் சொற்கள் குற்றமுடையனவென்று ஏற்றுக் கொள்வதற்கு நாணினாலும் சொல்லும் பொருளுமாகிய நீவிர் இருவீருக்கும் அவையுண்டு; ஆதலால் நாணாமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றபடி.
19. விண்டிருந்த - மலர்ந்திருந்த. பொற்கமலமீதிருந்த பொன் - திருமகள். அண்டரது தேங்காவில் தொண்டர் விற்றிருத்தற்கு; தொண்டர்கள் சொர்க்கப்பதவியில் வீற்றிருக்கும்படி செய்தற்கு என்றவாறு. வீற்றிருந்த பொன் - அங்கயற்கண்ணம்மை. ஒரு பொன் மற்றொரு பொன்னை ஏவல் கொள்ளுமென்பது ஒரு நயம்.
20. பொற்பூரவல்லிகொல், கமலத்தளேகொல்; கொல்லென்பதை முன்னும் கூட்டுக. பூரவல்லி - கலைமகள்; இந்நூல் 15-ஆம் செய்யுளைப் பார்க்க; புகுந்தகமும் அது - புக்க இடமாகிய அடியாருடைய உள்ளமும் தாமரையே. வெற்பு ஊர் அ வல்லி - இமயமலையில் அவதரித்த அழகிய உமாதேவியார், பிறந்தகமும் அது - பிறந்த இடமும் இமயமலைச் சுனையிலுள்ள தாமரை மலராகும்.
இங்ஙனம் இரண்டு உயர்ந்த தாமரைமலர்களை இருக்கையாகக் கொண்டவள் என் மனமாகிய இழிந்த தாமரையிலும் சிவபிரானுடன் குடி புகுந்த காரணம் என்ன வியப்பு? அவள் தாமரையை ஆதனமாக உடைய கலைமகளோ, அன்றித் திருமகளோ?
|