மதுரை மீனாட்சியம்மை குறம்
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் | கார்கொண்ட பொழின்மதுரைக் கர்ப்பூர | வல்லிமணங் கமழுந் தெய்வத் | தார்கொண்ட கருங்குழலங் கயற்கணா | யகிகுறஞ்செந் தமிழாற் பாட | வார்கொண்ட புகர்முகத்தைங் கரத்தொருகோட் | டருசெவிமும் மதத்து நால்வாய்ப் | போர்கொண்ட கவுட்சிறுகட் சித்திவிநா | யகன்றுணைத்தாள் போற்று வாமே. | | | | | | | |
சிந்து 1. | பூமருவிய பொழிறிகழ் மதுரா | புரிமருவிய வங்கயற்க ணம்மை | தேமருவிய மதிதவழ் குடுமித் | தென்பொதியக் குறத்திநா னம்மே.2. | செந்நென் முத்துங் கன்னன்முத் துமொளி | திகழ்மதுரை யங்கயற்க ணம்மை | பொன்னுமுத்துஞ் சொரியும்வெள் ளருவிப் | பொதியமலைக் குறத்திநா னம்மே. | | | | | | | |
(காப்பு.) புகர் - புள்ளி. குறம் பாடப் போற்றுவாம். சித்தி விநாயகர்: இத்தல விநாயகர்.
1. அம்மையினது பொதிய மென்க.
2. கன்னல் - கரும்பு. நெல்லும் கரும்பும் முத்துப்பிறக்கும் இடங்கள்.
|