அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 3. | செண்டிருக்கும் வடவரையிற் சேலிருந்து | மரசிருக்குந் தென்ன ரீன்ற | கண்டிருக்கு மதுரமொழிக் கனியிருக்குந் | துவரிதழங் கயற்கட் பாவை | வண்டிருக்கு நறைக்கமல மலரிருக்கும் | பரிபுரத்தாண் மனத்துள் வைத்துக் | கொண்டிருக்குந் தமிழ்முனிவன் குடியிருக்கும் | பொதியமலைக் குறத்தி நானே. | | | | | | | |
சிந்து 4. | மங்கை குங்குமக் கொங்கை பங்கயச் | செங்கை யங்கயற் கண்ணினாள் மறை பண்ணினாள் | பங்க னைக்கழ லங்க னைச்சொக்க | லிங்க னைக்கூடி மேவுவாய் கொல்லிப் பாவையே. | | | |
வேறு 5. | வஞ்சி யேயப ரஞ்சி யேமட மயிலே வரிக் குயிலே | கொஞ்சி யேபழி யஞ்சி யாருனைக் கூடுவா ரினி யம்மே. | |
வேறு 6. | புழுகாலே தரைமெழுகு பிள்ளை யார்வை | பொற்கோல மிட்டுநிறை நாழி வையாய். | |
3. செண்டு இருக்கும் வடவரை - கரிகாலன் செண்டாலெறிந்தமையால் அச்செண்டின் அடையாளம் இருக்கும் இமயமலை; “செண்டு கொண்டுகரி காலனொரு காலினிமயச் சிமயமால்வரை திருத்தரு ளி” (கலிங்கத்துப். 178). சேல் இருத்தும் - சேலைப்பொறித்த; சேல் - பாண்டியரது அடையாளப் பொறி. (பி-ம்.) ‘சேலிருக்கு’. அதனை அவர் இமயத்திற் பொறித்த செய்தி, இக்குறத்தின் 44-ஆம் பாட்டாலும், “கயலெழுதிய விமய நெற்றியின்” (சிலப். 17 : 1) என்பதனாலும் விளங்கும். தென்னரீன்ற பாவையென இயைக்க. பரிபுரத்தாள் - சிலம்பை யணிந்த திருவடி. தமிழ் முனிவன் - அகத்தியர்.
4. கழல் அங்கனை - தேவர்கள் உடம்பினின்றும் கழன்ற என்பை அணிந்தவரை.
5. அபரஞ்சியே - புடமிட்ட பொன் போல்வாய். பழியஞ்சியார் - சொக்கநாதர். கொஞ்சிக் கூடுவார்.
6. நிறைநாழி - நெல்லை நிறைத்த நாழி; நாழி: ஒருவகை முகத்தலளவைக் கருவி.
|