வேறு 7. | ஆழிகைதா வழகாருமங் கயற்கணம்மை பங்கர் | அழகியசொக்க ரருள்புரிவருன் பான்மருவி யம்மே. | |
வேறு 8. | பேசு மென்குறி மோச மென்றிடில் | ஆர்சொ லும்பரி யாசமே | வாச மென்குழ லாய்சவுந்தர | மாறர் வந்தணை வாரமே. | | | |
வேறு 9. | நங்கை நீகரு துங்குறி சொல்லவுன் | செங்கை தனைக்கொடு வாவெங்கள் | அங்க யற்கண்ணி பங்க ரருட்சொக்க | லிங்க ரினியணை வாரம்மே. | | | |
வேறு 10. | தூசுமொரு காசும்வையுண் ணேசம்வரவே சொல்லநான் | ஈசர்கயி லாசர்மது ரேசருனைச்சேர் வாரம்மே. | |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 11. | கைக்குறியின் முகக்குறிநன் றிடத்தெழுந்த | கவுளிநன்று கன்னி மார்வந் | திக்குறிநன் றென்கின்றா ரிடக்கண்ணுந் | துடிக்கின்ற திதன்மே லுண்டோ | பொய்க்குறிய சிறுமருங்குற் பூங்கொடிநீ | யங்கயற்கட் பூவை மாதின் | மெய்க்குறியும் வளைக்குறியு முலைக்குறியு | மணிந்தவர்தோண் மேவு வாயே. | | | | | | | | 7. ஆழி கைதா - ஆழியை அணிந்த கையைத்தா; ஆழி - மோதிரம். ஆழிக்கை யெனற்பாலது ஓசை நோக்கி இயல்பாயிற்று.
8. யாருடைய சொல்லும் பொருளற்ற பரியாசச் சொல்லேயாகும். அணைவார் அம்மே; அமே: இடைக்குறை.
10. தூசு - ஆடை. நேசம் வரவே வை. 11. இடத்து எழுந்த கவுளி நன்று - இடப்பக்கத்தே எழுந்த பல்லியின் சொல் நலமுடையது. கன்னிமார் - சத்தமாதர். மகளிருக்கு இடக்கண் துடித்தல் நன்னிமித்தம்; “நல்லெழிலுண்கணு மாடுமா லிடனே” (கலி. 11 : 22).
|