| பழம்பிழிந்த கொழுஞ்சாறுந் | தேறலும்வாய் மடுப்போம் | பசுந்தழையு மரவுரியு | மிசைந்திடவே யுடுப்போம் | செழுந்தினையு நறுந்தேனும் | விருந்தருந்தக் கொடுப்போம் | சினவேங்கைப் புலித்தோலின் | பாயலிற்கண் படுப்போம் | எழுந்துகயற் கணிகாலில் | விழுந்துவினை கெடுப்போம் | எங்கள்குறக் குடிக்கடுத்த | வியல்பிதுகா ணம்மே. | | | | | | | | | | | |
19. | புல்வாயின் பார்வையைவெம் புலிப்பார்வை யிணங்கும் | புதுத்தினைகல் லுரற்பாறை முன்றிறொறு முணங்கும் | கல்விடரில் வரிவேங்கை கடமானோ டுறங்கும் | கருமலையில் வெள்ளருவி கறங்கிவழிந் திறங்கும் | சில்வலையும் பல்வாரு முன்னிறப்பிற் றூங்கும் | சிறுதுடியும் பெருமுரசுந் திசைதொறுநின் றேங்கும் | கொல்லையின்மான் பிணையுமிளம் பிடியும்விளை யாடும் | குறிச்சியெங்கள் குறச்சாதி குடியிருப்ப தம்மே. | | | | | | | |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 20. | வெள்ளிமலைக் குறவன்மகன் பழனிமலைக் | குறவனெங்கள் வீட்டிற் கொண்ட | வள்ளிதனக் கேகுறவர் மலையாட்சி | சீதனமா வழங்கி னாராற் | | | |
19. புல்வாயின் பார்வை - மானாகிய பார்வை மிருகம்; விலங்குகளைப் பிடித்தற்குக் குறவர்களால் உயிரோடு வளர்த்துப் பழக்கப்படும் மிருகம்; இது தீபகமெனவும் வழங்கும். உணங்கும் - காயும். கல்விடர் - மலைக்குகை. கடமான் - யானை. கறங்கி - ஒலித்து. இறப்பு - வீட்டின் தாழ்வாரத்தின் முன்புறக் கம்பத்தின் மேலுள்ள உறுப்பு. ஏங்கும் - முழங்கும். குறிச்சி - குறிஞ்சி நிலத்து ஊர்.
20. சீதனம் - பெண்களுக்குக் கொடுக்கப்படும் பொருள். பிறகே வந்த கள்ளியென்றது இரண்டாந்தாரத்தை. முன்பெல்லாம் இங்ஙனம் வாழ்ந்தோம்; என் மாற்றாள் வந்தபின் வறுமை யுற்றோமென்று அவள் மேற் குற்றம் சாரும் குறிப்புப் படக் கூறினாள்.
|