| பிள்ளைதனக் கெண்ணெயிலை யரைக்குமொரு | துணியிலையென் பிறகே வந்த | கள்ளிதனைக் கொண்டவன்றே குறவனுக்கு | மெனக்குமிலை கஞ்சி தானே. | | | |
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 21. | கூடல்புன வாயில்கொடுங் குன்றுபரங் குன்று | குற்றால மாப்பனூர் பூவணநெல் வேலி | ஏடகமா டானைதிருக் கானப்பேர் சுழிய | லிராமேசந் திருப்புத்தூ ரிவைமுதலாந் தலங்கள் | நாடியெங்க ளங்கயற்கண் ணாண்டதமிழ்ப் பாண்டி | நன்னாடும் பிறநாடு மென்னாட தாகக் | காடுமலை யுந்திரிந்து குறிசொல்லிக் காலங் | கழித்தேனென் குறவனுக்குங் கஞ்சிவாரா தம்மே. | | | | | | | |
22. | பொற்றொடிவள் ளிக்கிளைய பூங்கொடியென் பாட்டி | பூமகண்மா யவன்மார்பிற் பொலிவளென்று சொன்னாள் | மற்றவள்பெண் களிலெங்கள் பெரியதாய் கலைமான் | மலரயனார் திருநாவில் வாழ்வளென்று சொன்னாள் | பெற்றவெங்க ணற்றாயுஞ் சுந்தரியிந் திரன்றோள் | பெறுமென்றாள் பின்னெங்கள் சிறியதா யம்மே | சொற்றகுறிக் களவிலையெங் கன்னிமா ரறியச் | சொன்னேன்பொய் யலநாங்கள் சொன்னதுசொன் னதுவே. | | | | | | | |
21. கொடுக்குன்று - பிரான்மலை. கானப்பேர் - காளையார் கோயில். “கூடல் புனவாயில்” என்ற வெண்பாவிற் காணப்படும் பாண்டி பதினாலு தலங்களும் இதிற் கூறப்பட்டன. குறவனென்றது தன்கணவனை.
22. தன் சுற்றத்தினர் சொல்லிய குறிகள் பலித்த வரலாறுகளைக் கூறுகின்றாள்.
பூமகள் - திருமகள். அவளென்றது தன்பாட்டியை, கலைமான் - சரசுவதி. சுந்தரி - இந்திராணி. கன்னிமார்: 11. சொன்னது சொன்னதுவே - சொன்ன குறிகள் மாறாமற் பலிக்கும்; இஃது உலக வழக்கு.
|