23. | முன்னொருநா ளம்மைதடா தகைபிறந்த நாளின் | முகக்குறிகண் டிவளுலக முழுதாளு மென்றேன் | பின்னொருநாள் கைக்குறிபார்த் தம்மையுனக் கெங்கள் | பிஞ்ஞகர்தா மணவாளப் பிள்ளையென்று சொன்னேன் | அன்னையவண் மெய்க்குறிக ளனைத்தையும்பார்த் துனக்கோ | ராண்பிள்ளை யுண்டுபிறந் தரசாளு மென்றேன் | சொன்னகுறி யெல்லாமென் சொற்படியே பலிக்கும் | தொகுத்துநீ நினைத்தகுறி யினிச்சொலக்கே ளம்மே. | | | | | | | |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 24. | ஒருகாலங் கஞ்சியுமென் குஞ்சுதலைக் | கெண்ணெயுமோ ருடுப்பு மீந்தாற் | பொருகால வேற்கண்ணாய் மனத்துநீ | நினைத்தவெலாம் புகல்வன் கண்டாய் | வருகால நிகழ்காலங் கழிகால | மூன்றுமொக்க வகுத்துப் பார்த்துத் | தருகாலந் தெரிந்துரைப்ப தெளிதரிதன் | றெங்கள்குறச் சாதிக் கம்மே. | | | | | | | |
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 25. | குங்குமஞ்சந் தனக்குழம்பிற் குழைத்துத்தரை மெழுகிக் | கோலமிட்டுக் குங்குலியக் கொழும்புகையுங் காட்டிச் | செங்கனக நவமணிக டிசைநான்கும் பரப்பித் | தென்மேலை மூலைதனிற் பிள்ளையார் வைத்துப் | பொங்குநறு மலரறுகோ டைங்கரர்க்குச் சாத்திப் | புழுகுநெய்வார்த் திடுவிளக்கு நிறைநாழி வைத்து | மங்கையருக் கரசியெங்க ளங்கயற்கண் ணமுதை | மனத்துள்வைத்து நினைத்தகுறி யினிச்சொலக்கே ளம்மே. | | | | | | | |
23. தான் கூறிய குறி பலித்த வரலாறுகளைக் கூறுகின்றாள்.
பிஞ்ஞகர் - சிவபெருமான். 24. ஒருகாலம் கஞ்சி - ஒருவேளைக்கு ஆகும் கஞ்சி. என் குஞ்சு - என் குழந்தை. (பி-ம்.) ‘குஞ்சி தலைக்கு’. “பாலக னுச்சியி லெண்ணெய்வார் பழகிய தோர்கலை கொண்டுவா” (அரங்கக்கலம். 69). உடுப்பு - ஆடை. கழிகாலம் - இறந்தகாலம்.
|