பக்கம் எண் :

536குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

26.
முந்நாழி முச்சிறங்கை நெல்லளந்து கொடுவா
   முறத்திலொரு படிநெல்லை முன்னேவை யம்மே
இந்நாழி நெல்லையுமுக் கூறுசெய்தோர் கூற்றை
   யிரட்டைபட வெண்ணினபோ தொற்றைபட்ட தம்மே
உன்னாமுன் வேள்விமலைப் பிள்ளையார்வந் துதித்தா
   ருனக்கினியெண் ணினகரும மிமைப்பினிற்கை கூடும்
என்னாணை யெங்கள்குலக் கன்னிமா ரறிய
   வெக்குறிதப் பினுந்தப்பா திக்குறிகா ணம்மே.

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
27.
நெல்லளந் திட்ட போது நிமித்தநன் றிடத்தெ ழுந்த
பல்லியும் வரத்தே சொல்லும் பத்தினிப் பெண்கள் வாயாற்
சொல்லிய வாய்ச்சொ லன்றித் தும்மலு நல்ல தேகாண்
அல்லது கிளைகூட் டும்புற் றாந்தைவீச் சழகி தம்மே.

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
28.
கொண்டுவா வம்மேகை கொண்டுவா வம்மே
  கொழுங்கனக நவமணிக ளளைந்திடுமுன் கையே
வண்டுசுலா மலர்கொய்ய வருந்திடுமுன் கையே
  வருந்தினர்க்கு நவநிதியுஞ் சொரிந்திடுமுன் கையே
புண்டரிகம் பூத்தழகு பொலிந்திடுமுன் கையே
  புழுகுறுநெய்ச் சொக்கர்புயந் தழுவிடுமுன் கையே
அண்டர்தநா யகியெங்கண் மதுரைநா யகியை
  யங்கயற்கண் ணாயகியைக் கும்பிடுமுன் கையே.

26. சிறங்கை - சிறு அங்கை யென்பதன் மரூஉ; உள்ளங்கையளவு. ஒற்றை பட்டது: “உதயமான சுளகு நெல்லு மொற்றை பட்டதாதலால்” (அருணைக்கலம். 50).

    27. வரத்தே - வரவையே. வாய்ச்சொல்: இதனை விரிச்சியென்பர். தும்மலுநல்லது; “தும்மலுநல் வரத்தேகாண்” (குமர. 181). புற்றின் மேலுள்ள ஆந்தை. வீச்சு - குரல்.

    28. அளைந்திடும் - பயிலும்.