29. | அம்மேநின் செங்கையைநின் கொங்கையில்வைத் ததுதா | னபிடேகச் சொக்கருனை யணைவரென்ற குறிகாண் | இம்மேலைத் திகையினிற்கை யெடுத்ததுவு மவர்தாம் | இன்றந்திப் பொழுதினில்வந் தெய்துவரென் றதுகாண் | கைம்மேற்கை கட்டியதுந் தப்பாம லுனக்குக் | கைகூடு நீநினைத்த காரியமென் றதுகாண் | செம்மேனி மணிவயிற்றிற் கைவைத்த தினிநீ | சிறுவர்பதி னறுவரையும் பெறுவையென்ற தம்மே. | | | | | | | |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 30. | அங்கைத் தலத்துத் தனரேகை யளவில் | செல்வந் தருமுனது | செங்கைத் துடிதென் மதுரேசர் செம்பொற் | புயத்திற் சேர்க்குமால் | இங்கிப் படிபுத் திரரேகை யெவர்க்கு | மிலையிப் படிதோளில் | தங்கு மறுவங் கயற்கணம்மை தன்னோ | டிருக்கத் தருமம்மே. | | | | | | | |
சிந்து 31. | பொன்பொதியுந் துகிலெனவெண் புயலொடுதண் பனிமூடும் | தென்பொதிய மலையாட்டி பேரைச்சொல்லாய் பாடநான். | |
29. அபிடேகச் சொக்கர் - முடியை யணிந்த சொக்கர். கொங்கைக்குக் கிரீடத்தை உவமையாகக் கூறுதல் மரபாதலின் இங்ஙனம் குறி கூறினாள். மேலைத்திசை - மேற்குத்திக்கு. பதினறுவரைப்பெறுதல்: “ஒருத்தி யகமுடையான் சிந்தை, வரநடந்து பதினாறு பிள்ளிபெற்றே யகமகிழ்ந்தாள்” (தனிப்.) ‘பதினாறும் பெற்றுப் பெறுவாழ்வு வாழ’ என்பது ஒரு வழக்கு.
30. தனரேகை - செல்வத்தைக் குறிக்கும் கோடு. துடி - தமருக ரேகை. மறு - மச்சம்.
31-9. இவற்றில் அங்கயற்கண்ணியின் தசாங்கம் சொல்லப்படும்.
31. புயலும் பனியும் துகிலுக்கு உவமை. மலையாட்டி - மலைக்கு உரியவள்.
|