பக்கம் எண் :

538குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

32.
பலநதிகள் புணர்ந்தநதி பதியையணை யாதவைகைக்   
குலநதித்தண் டுறைச்செல்வி பேரைச்சொல்லாய் பாடநான்.

33.
அன்பாண்டு கல்வலிதென் றவ்வைபா டியவெங்கள்       
தென்பாண்டி நாட்டாடன் பேரைச்சொல்லாய் பாடநான். 

34.
பொன்மாடஞ் சூழ்ந்தகரும் புயலமலன் போர்வைநிகர்    
பன்மாடக் கூடலாள் பேரைச்சொல்லாய் பாடநான். 

35.
எண்டிசைக்கும் வேம்பாயெம் மிறையவர்க்குக் கரும்பாகும்
வண்டிசைக்குந் தாரினாள் பேரைச்சொல்லாய் பாடநான்.

36.
தினவட்ட மிடும்பருதித் திண்பரிமண் பரியாக்கும்          
கனவட்ட வாம்பரியாள் பேரைச்சொல்லாய் பாடநான்.

37.
திக்கயங்கள் புறங்கொடுப்பத் திசையெட்டுந் திறைகொண்ட
கைக்கயத்தை மேற்கொண்டாள் பேரைச்சொல்லாய் பாடநான்.

38.
ஆனேற்றுங் கொடியானை யைங்கணையான் வென்றிடவம்  
மீனேற்றின் கொடியுயர்த்தாள் பேரைச்சொல்லாய் பாடநான். 

39.
இனியாணை யிலையரசர்க் கென்றுதிசை யெட்டுமொரு     
தனியாணை செலுத்தினாள் பேரைச்சொல்லாய் பாடநான். 

    32. நதிபதி - கடல். திருவாதவூரடிகள் புராணமுடையாரும், பரஞ்சோதி முனிவரும் வையைநதி கடலொடு கலக்கவில்லை யென்று கூறுவர். அது பாம்பாற்றுக் காலோடு கலந்து கடலிற் புக்கதென்று தக்கயாகப்பரணி, 212-ஆந் தாழிசை உரையில் அவ்வுரையாசிரியர் எழுதுவர்.

    33. அன்பு ஆண்டு - அன்பை மேற்கொண்டு. கல் வலி தென்று ஒளவை பாடிய பகுதி, “பஞ்சவன்றன், நான்மாடக் கூடலிற் கல்வலிது” (தனிப்.) என்பது.

    34. போர்வை - யானைத்தோலாகிய போர்வை.

    35. இறையவர் விரும்புதலால் வேம்பைக் கரும்பாகுமென்றாள்.

    36. கனவட்டமென்பது பாண்டிய அரசர்க்குரிய குதிரை. அது தன் கால்தூளியால் சூரியனுடைய குதிரையாகிய விண்பரியை மூடி மண்பரியாகச் செய்யும்.

    37. கைக்கயம் - துதிக்கையையுடைய யானை.

    38. ஐங்கணையான் - காமன்.