பக்கம் எண் :

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை547

கட்டளைக் கலித்துறை
20.
தருவற நாணத் திருவறச்சாலை சமைத்தம்மைநீ
பொருவறு நல்லறம் பூண்டதென் னாமெந்தை பொற்புலியூர்
மருவறு மத்த முடித்துக் கடைப்பலி தேர்ந்துவம்பே
தெருவற வோடித் திரிதரு மான்மற்றுன் சீர்த்திகொண்டே.

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை முற்றிற்று.


    20. தரு அற நாண - கொடைக்குக் கற்பகத்தரு மிக நாணும்படி இறைவர் பிச்சை யெடுப்பாரானால் நீ அறம் செய்தும் பயனில்லையே. மரு அறும் மத்தம் - வாசனையற்ற ஊமத்தம்பூவை. தெரு அற ஓடி - தெருக்களில் மிக ஓடி. திரிதரும் - திரியா நிற்பர். உன் சீர்த்தி கொண்டு திரிதருவார்.

    “இறைவர்க்குத் தக்க விறுமாப் பெனுமொழி யின்றியொரு, மறுவற்ற தன்மனை யாட்கேற்ற தாமிறு மாப்பனெனக், குறைவற்ற நெற்கொண் டுலகேற் றுனைப்பலி கொள்ளுமரன், பெறவுற் றனையனை யேகுன்றை வாழும் பெரியம்மையே” (பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை, 1).