இதுகாறும் கூறிய விஷயங்கள் இவருடைய பரந்த உலகியலறிவை எடுத்துக் காட்டும்.
தவத்தாலும் அறிவாலும் முதிர்ந்த இம்முனிவர்பிரான் உலகினருக்கு உறுதி பயக்கும் அறம்பொருளின்ப வீடுகள் ஆகிய நால்வகைப் பொருளையுங் குறித்துப் பல அரிய நீதிகளை எடுத்து உணர்த்துகின்றார். நீதிகளைத் தனியே எடுத்து நீதிநெறி விளக்கத்தில் உணர்த்தயதன்றி மற்ற இடங்களிலும் சிலவகையில் அமைத்துத் தெரிவிக்கின்றார்.
இல்லறம் துறவறம் என்னும் இரண்டன் இலக்கணங்களும் சிதம்பர மும்மணிக்கோவையில் ஒரு செய்யுளிற் சுருக்கமாக உரைக்கப்பட்டுள்ளன.
“நல்ல நூல்களைக் கற்று அவற்றின் வழிநின்று கற்புடைய மனைவியோடு மகப்பேற்றை விரும்பி நன்னாளில் இன்பந்துய்த்து அன்பும் அருளும் உடையவனாகி இன்சொற் கூறி விருந்தினரை உபசரித்து அருந்தவத்தினரைப் பாதுகாத்து ஐவகை வேள்வியை யாற்றிப் பிற நல்ல அறங்களை நிறைவேற்றிப் புகழ் பூண்டு பிறன் மனையை நயவாமல் வாழ்தல் இல்லறம்” என்பது அங்கே கூறப்படும் இல்லற இலக்கணம்.
“இல்லறம் பூண்டு வாழ்ந்தபின் ஞானசாஸ்திரங்களைக் கேட்டு மெய்யறிவு வாய்க்கப்பெற்றுப் பொருளையும் இன்பத்தையும் நீங்கி அருள், பொறை, ஆற்றல், ஒழுக்கம், வாய்மை, தவம், தூய்மை யென்னும் குணங்கள் பொருந்தி ஓரறிவுயிர்க்கு வரும் துன்பத்தையும் பாதுகாத்துக் காலால் நடந்து தோலுடுத்து என்பு தோற்றும்படி உடம்பிளைத்துத் துன்பங்களுக்கு் நடுங்காமல் மலை காடு என்பவற்றிற்குச் சென்று சருகையும் நீரையும் காற்றையும் அருந்திப் பனிக் காலத்தில் தண்புனலில் மூழ்கியும வேனிற் காலத்தில் பஞ்சாக்கினியிலிருந்தும் தவம் புரிந்து ஒழுகுவது துறவறம்” (451) என்பது இவர் கூறும் துறவற இலக்கணம். கல்வியைப் பற்றி நீதிநெறி விளக்கத்தில் உள்ள செய்திகள் வருமாறு: கல்வி அறம் பொருளின்பம் வீடென்னும் நான்கை
|