102குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

யும் பயக்கும்; பெரும் புகழை உண்டாக்கும்; கவலையுற்ற விடத்துத் துணையாக இருந்து உதவும். அதைக்காட்டிலும் சிறந்த துணை வேறில்லை. தொடங்கும்போது துன்பமாகிப் பிறகு இன்பத்தைப் பயக்கும்; அறியாமையை நீக்கி அறிவை விரிவுபடுத்தும். அது கற்புடைய மனைவியை ஒப்பது; அம் மனைவியினாற் பெறும் செல்வப் புதல்வனே இனிய செய்யுளாகும்; சொல்வன்மை செல்வமாகும். அந்தச் செல்வத்தால் சபை மகிழ்வுறும்படி செய்யும் இயல்புடையோர் சிலரே யாவர்.

    எவ்வளவுதான் கற்றிருப்பினும் உய்த்துணர்தல் இல்லையெனில் அக்கல்வி பயனுறாது; உய்த்துணர்வு இருந்தும் சொல் வன்மை இல்லையெனின் அது பயன்பெறாது; சொல்வன்மை இருப்பின் பொன்மலர் மணம் பெற்றது போலாகும். அவைக்கு அஞ்சி நடுங்குவோரது கல்வியும் அவைக்கு அஞ்சாத பேதையருடைய ஆரவாரச் சொற்களும் பயனற்றனவாம்.

    புலவர்களுக்குப் பிரமனும் ஒப்பாகான். அவர்கள் செய்யும் செய்யுட்கள் புகழோடு என்றும் நின்று நிலவுவனவாம்.

    தாம் நெடுங்காலம் கற்ற கல்வி சபையிற் பயன்படாமல் நடுங்குவோருக்கு அக்கல்வி அயலானிடத்திற் காணும் தன் மனைவியைவிடப் பொல்லாதது; அவளையேனும் நீத்துவிடலாம்; அக்கல்வி நீக்கினாலும் நீங்குவதன்று.

    முன்னரே வருந்திக் கற்றவற்றைப் பாதுகாவாமல் பின்னரும் சில பயிலத் தொடங்குதல் கையிலே உள்ள அரியபொருள்களை எறிந்துவிட்டு அரிப்பரித்துப் பொருளீட்டத் தொடங்குவது போலாகும். எவ்வளவினதாக இருப்பினும் வறியோரது கல்வி சிறிதேனும் சிறப்படைய மாட்டாது. கல்வியை யுடையோருக்கு அக்கல்வியே பெரிய அழகாகும்.

    எத்தகைய கல்வி யுடையோராயினும் முழுதுங் கற்றோமென்று இருமாப்படைதல் தகாது. முற்றுமுணர்ந்தவர் உலகில் இல்லை. தம்மைக் காட்டிலும் அதிகமாக்க் கற்றோரை நோக்கி, ‘இவருக்கு நாம் எம்மாத்திரம்!’ என்று கருத்தழிய வேண்டும்.

    கல்வி கற்பார் மிகவும் பணிவுடையராதல் வேண்டும். கற்றுப் பிறருக்குரைத்துத் தாம் அவ்வழி நில்லாதாரை உலகத்தினர் பழிப்பர். தாம் கற்றவற்றைப் பிறருக்குப் பயன்படுதற்கு மாத்திரமளிப்பார் யமனது துன்பத்துக்கு ஆளாதலை