ஆராய்ச்சி103

யன்றி வேறு பயன் பெறார். கற்கும் நல்லூழ் இல்லாதார் கல்விக் கழகத்தில் தம்முடைய ஊத்தை வாயைத் திறத்தலினால் தமது அறியாமையைத் தாமே வெளிப்படுத்திக் கொள்வர்.

    குற்றமற்ற கல்வியானது அறிவுடையார் பாலல்லாமல் பிறர்பாற் சேராது. கற்றவற்றை உரியவர்களுக்குச் சொல்ல வேண்டுமே யன்றிக் கல்லாத பேதையருக்குச் சொல்லப்புகின் குற்றமே உண்டாகும்.

ஈகை முதலியன

    இங்ஙனமே ஈகையின் இயல்பு, பொருளீட்டும் முறை, இல்லற இயல்பு, முயற்சியின் பெருமை,த தற்புகழ்ச்சியின் தீமை, அரசர் இயல்பு, துறவற விலக்கண மென்பன விரிவாகச் சொல்லப் பெறுகின்றன.

“கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள் .....துன்பமலா தில்”
(305)
என்பதில் இல்லறச் செய்தியைத் துறவற இலக்கணத்திற்கு உவமையாக்கி அவை இரண்டின் இயல்பையும் ஒருங்கே புலப்படுத்தினார்.

    சில இடங்களில் யோகியர் இயல்பும் சிவயோகசாதன இயல்புகளும் கூறப்பட்டுள்ளன.

“செல்வ மென்பது சிந்தையி னிறைவே
 அல்கா நல்குர வவாவெனப் படுமே”
(475)
என்னும் அடிகள் பொன்னெழுத்திற் பொறிக்கத்தக்கவை.
“பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
 மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர் பிறர்
 சீரெல்லாந் துற்றிச் சிறுமை புறங்காத்து
 யார்யார்க்குந் தாழ்ச்சி சொல்ல்”
(225)
என்பது யாவரும் உலகில் நன்மதிப்பை அடைதற்குரிய சிறந்த உபாயமாக உள்ளது.

“...................... என்சொலினும்
 கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடன்ஞாலம்”
(216)
என்பதில் உலகத்தாருடைய பேதைமையை விளக்குகின்றார்.
“ஈகை யரிதெனினு மின்சொலினு நல்கூர்தல்
 ஆவா விவரென்செய் வார்”
(273)
என்பதனால் கடுஞ்சொற் கூறுவார்பால் இவருக்கிருந்த வெறுப்பு எத்தகையதென்பது புலனாகின்றது.