மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை527

நவையுண் டெனவற நாணுதி  
    போலு நகைத்தெயின்மூன்  
றவையுண் டவரொ டருட்கூடல்  
    வைகுமம் மேற்சொற்பொருட்  
கெவையுண்டு குற்ற மவையுண்டு  
    நீவி ரிருவிர்க்குமே.  

நேரிசை வெண்பா
19.
விண்டிருந்த பொற்கமல மீதிருந்த பொன்னினையும்
கொண்டிருந்து குற்றேவல் கொள்ளுமாற் - றொண்டரண்டர்
தேங்காவில் வீற்றிருப்பத் தென்மதுரைக் கேகடப்பம்
பூங்காவில் வீற்றிருந்த பொன்.

கட்டளைக் கலித்துறை
20.
பொற்பூர வல்லி கமலத்த ளேகொல் புகுந்தகமும்
வெற்பூர வல்லி பிறந்தக மும்மது மீட்டுமென்னே
அற்பூர வல்லியென் வன்னெஞ்சக் கஞ்சத்தெம் மையனொடும்
கற்பூர வல்லி குடிபுகுந் தேநின்ற காரணமே.

மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை முற்றிற்று.


இருவரும் முறையே சொல்லாகவும் பொருளாகவும் இருத்தலின், இங்ஙனம் கூறினார் (திருவிளை. இடைக்காடன், 10). என் சொற்கள் குற்றமுடையனவென்று ஏற்றுக் கொள்வதற்கு நாணினாலும் சொல்லும் பொருளுமாகிய நீவிர் இருவீருக்கும் அவையுண்டு; ஆதலால் நாணாமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றபடி.

    19. விண்டிருந்த - மலர்ந்திருந்த. பொற்கமலமீதிருந்த பொன் - திருமகள். அண்டரது தேங்காவில் தொண்டர் விற்றிருத்தற்கு; தொண்டர்கள் சொர்க்கப்பதவியில் வீற்றிருக்கும்படி செய்தற்கு என்றவாறு. வீற்றிருந்த பொன் - அங்கயற்கண்ணம்மை. ஒரு பொன் மற்றொரு பொன்னை ஏவல் கொள்ளுமென்பது ஒரு நயம்.

    20. பொற்பூரவல்லிகொல், கமலத்தளேகொல்; கொல்லென்பதை முன்னும் கூட்டுக. பூரவல்லி - கலைமகள்; இந்நூல் 15-ஆம் செய்யுளைப் பார்க்க; புகுந்தகமும் அது - புக்க இடமாகிய அடியாருடைய உள்ளமும் தாமரையே. வெற்பு ஊர் அ வல்லி - இமயமலையில் அவதரித்த அழகிய உமாதேவியார், பிறந்தகமும் அது - பிறந்த இடமும் இமயமலைச் சுனையிலுள்ள தாமரை மலராகும்.

    இங்ஙனம் இரண்டு உயர்ந்த தாமரைமலர்களை இருக்கையாகக் கொண்டவள் என் மனமாகிய இழிந்த தாமரையிலும் சிவபிரானுடன் குடி புகுந்த காரணம் என்ன வியப்பு? அவள் தாமரையை ஆதனமாக உடைய கலைமகளோ, அன்றித் திருமகளோ?