மூன்று தனிப் பிரபந்தங்களைப் பற்றிய குறிப்பு127

குறிச்சியிலேயுள்ள காட்சிகளையும் விரித்துரைக்குன்றாள், “முன்பு குறவர்கள் தங்கள் மலையாட்சியை முருகக் கடவுளுக்குச் சீதனமாக வழங்கினர்; இப்போதோ பிள்ளை தனக்கெண்ணெயிலை; அரைக்குமொருதுணியிலை” என்றும், தன்னுடைய கணவன் மற்றொருத்தியை மணம் செய்துகொண்டபின் இந்த நிலை தனக்கு வந்ததென்றும் இயம்புகின்றாள்.

    தான் பல தலங்களுக்குச் சென்று குறிசொல்லியதாகக் குறத்தி கூறுகின்றாள். அங்கே பாண்டிநாட்டுக்குரிய பதினான்கு தலங்களின் பெயர்களும் வந்துள்ளன.

    அப்பால் அவள் தன் உறவின்முறையார் இன்னாரின்னாரென்றும் இன்னாரின்னாருக்கு இன்ன இன்னபடி நிகழுமென்று தான் கூறியபடியே குறிகள் பலித்தனவென்றும் சொல்லிவிட்டு “ஒருகாலங் கஞ்சியுமென் குஞ்சுதலைக் கெண்ணயுமோருடுப்பு மீந்தால், பொருகால வேற்கண்ணாய் மனத்துநீ நினைத்தவெலாம் புகல்வன் கண்டாய்” (24) என்று இரக்கின்றாள்.

    “வருகால நிகழ்கால கழிகாலங் மூன்றுமொக்க வகுத்துப் பார்த்துத், தருகாலந் தெரிந்துரைப்ப தெளிதன் றெங்கள் குறச் சாதிக் கம்மே” என்று அவள் கூறுவது, பன்னிரு பாட்டியற் சூத்திரத்துக் கண்ட இலக்கணத்தை நினைப்பூட்டுகின்றது.

    பின்னர், தரையை மெழுகிக் கோலமிட்டுத் தூபம் காட்டிப் பிள்ளையாரைத் தென்முலையில் ஆவாகனம் செய்யும்படி குறத்தி தலைவிக்குப் புகல்கின்றாள்; விநாயகருக்கு மலரும் அறுகும் சாத்தி விளக்கும் நிறைநாழியும் வைத்த பின்பு முறத்திலே நெல்லைக் கொணரச்செய்து அதை எண்ணிப்பார்த்துக் குறி கூறுகின்றாள். இங்ஙனம் முறத்திலே நெல்லை வைத்துக் குறி பார்த்தலைக் கட்டுப் பார்த்தல் என்று கூறுவர். அதனைப் பார்க்கும் பெண்பாலுக்குக் கட்டு வித்தி யென்னும் பெயர் வழங்கும்.

    குறத்தி நெற்குறி, பல்லி சொற்குறி, பத்தினிப் பெண்கள் வாக்காகிய விரிச்சி, தும்மல், ஆந்தையின் குரல் என்பவற்றால் நன்னிமித்த முண்டாதலை யறிந்து கூறித் தலைவியின் கையைப் புகழ்ந்து பாராட்டிக் கைக்குறியும் மெய்க்குறியும் உணர்ந்து சொல்லுகின்றாள்.