126குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

    பாட்டுடைத் தலைவனைக் காமுற்ற தலைவியொருத்தியைக் கண்டு குறத்தி குறிகூறுவதாக அமைப்பது மரபு. இங்கே பாட்டுடைத்தலைவி மீனாட்சிஅம்மை; ஆதலின் ஸ்ரீ சொக்கலிங்கப் பெருமான்பால் கருத்திழந்த தலைவி கூறப்படுகின்றாள். மீனாட்சிஅம்மையின் திருநாமமும் புகழும் சார்த்துவகையாற் சொல்லப் பெறுகின்றன.

    இதில் முதற்பாட்டு சித்திவிநாயகர் காப்பாக உள்ளது. அப்பால் குறத்தியின் கூற்று விரிவாக அமைந்திருக்கின்றது.

    தான் பொதியமலையில் வாழும் குறத்தியென்பதை அவள் முதலிற் கூறிக்கொண்டு, தலைவிக்குச் சொக்கப்பெருமானோடு அளவளாவும் பேறு கிடைக்குமென்று ஊக்கமளிக்கிறாள். அப்பால் புழுகினாலே தரையை மெழுகிப் பிள்ளையார் பிடித்து வைத்துக் கோலமிட்டு நிறைநாழியை வைக்கும்படி தலைவியிடம் சொல்லி அவளது கையை நீட்டும்படிசெய்து அதைப் பார்த்துக் குறிகூறத் தொடங்குகின்றாள்.

    “நான் சொல்லும் குறி மோசமானால் அப்பால் இந்த உலகத்தில் யாருடைய வார்த்தையும் பொருளற்ற பரியாசச் செல்லோயாகும்; ஆடையும் காசும் வை; குறிசொல்கிறேன்; சொக்கலிங்கப் பெருமான் உன்னை நிச்சயமாக அணைவார்” என்று அவள் கூறும்போது உலகியலறிந்தவ ளென்பதை அறிகின்றோம்.

    கைக்குறி, முகக்குறி, கவுளி. கன்னிமார்வாக்கு, இடக்கண் துடித்தல் என்பவற்றை ஆராய்ந்து, “அங்கயற்கட் பூவை மாதின், மெய்க்குறியும் வளைக்குறியு முலைக்குறியு மணிந்தவர் தோண்மேவுவாயே” என்று பலன் பகர்கின்றாள்.

    பின்பு தனக்குரிய பொதிய மலையின் பெருமையையும் வளத்தையும் பாராட்டிப் பேசுகின்றாள். அந்தமலை தமிழின் தொடர்புடையதென்பதை, “தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை” (13), “தென்னந் தமிழும் பசுங்குழவித் தென்றற் கொழுந்துந் திளைக்குமலை” (14), “வடகலைதென் கலைபயிலு மலையெங்கண் மலையே” (15) என்பவற்றால் விளக்குகின்றாள்.

    குறத்தி அப்பால் ஆறிருதோட் சிறுவனுக்குக் கொச்சைச் சிறுமிதனைக் கொடுத்த குலம் தங்கள் குறவர்குலமென்றுரைத்து அக்குறக்குடிக் குரிய இயல்புகளையும் அவர்கள் குடியிருக்கும்