மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை525

பொருவால வாயெட்டுப் போர்க்களி
   றேந்துபொற் கோயில்கொண்ட
திருவால வாய்மருந் தேதென்னர்
   கோன்பெற்ற தெள்ளமுதே

நேரிசை வெண்பா
13.
தென்மலையுங் கன்னித் திருநாடும் வெள்ளிமலைப்  
பொன்மலைக்கே தந்த பொலங்கொம்பே - நின்மா  
முலைக்குவடு பாய்சுவடு முன்காய மாலம்  
மலைக்குவடு வன்றே மணம்.  

கட்டளைக் கலித்துறை
14.
மணியே யொருபச்சை மாணிக்க
   மேமருந் தேயென்றுன்னைப்
பணியேன் பணிந்தவர் பாலுஞ்செல்
   லேனவர் பாற்செலவும்
துணியேன் றுணிந்ததை யென்னுரைக்
   கேன்மது ரைத்திருநாட்
டணியே யனைத்துயிர்க் கும்மனை
   நீயென் றறிந்துகொண்டே.

நேரிசை வெண்பா
15.
கொண்டைச் செருக்குங் குருநகையு நெட்டயிற்கட்
கெண்டைப் பிறக்கமும்வாய்க் கிஞ்சுகமுங் கொண்டம்மை
கற்பூர வல்லி கருத்திற் புகப்புகுந்தாள்
நற்பூர வல்லியுமென் னா.

வழங்குவாயாக, இறைவனைக் கற்பகமாகக் கூறுதல்: (குமர. 521, 549). தடக்கை நேர் பொருவாலவாய் - முன்னே தொங்கும் வளைந்த கையை ஒத்துப் பின்னே விளங்கும் வாலையுடையனஇவாகி. மதுரையாலயத்திலுள்ள இந்திர விமானம் எட்டுக் களிறுகளால் சுமக்கப்பெறுவது
(குமர. 3).

    13. தென்மலை - பொதியில். வெள்ளிமலையிலுள்ள பொன்மலை போன்ற சிவபெருமானுக்கு. முலைக்குவட்டினால் உண்டான சுவடு மார்பிடத்தே காயமாக நின்றது. அஃது அம்மலைக்கு வடுவாகாமல் மணமாதற்குக் காரணமாயிற்று; முதுகிற் பட்டிருந்தால் வடு ஆகுமென்றபடி.

    14. அறிந்துகொண்டு பணியேனென்க. துணிந்ததை - அடியேன் துணிந்த தீங்கான செயலை.

    15. பிறக்கம் - மிளிர்தல். வாய்க் கிஞ்சுகம் - வாயாகிய முள்ளு முருங்கைமலர். கற்பூரவல்லி கொண்டைச் செருக்கு முதலியவற்றோடு