| . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . | . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . | இந்தமா நிலம்புரக்கு மங்கயற்கண் ணம்மை | யின்பமுறுந் தென்பொதிய மலையெங்கண் மலையே. | | | |
16. | சிங்கமும்வெங் களிறுமுடன் விளையாடு மொருபாற் | சினப்புலியு மடப்பிணையுந் திளைத்திடுமங் கொருபால் | வெங்கரடி மரையினொடும் விளையாடு மொருபால் | விடவரவு மடமயிலும் விருந்தயரு மொருபால் | அங்கணமர் நிலங்கவிக்கும் வெண்கவிகை நிழற்கீ | ழம்பொன்முடி சூடுமெங்க ளபிடேக வல்லி | செங்கமலப் பதம்பரவுங் கும்பமுனி பயிலுந் | தென்பொதிய மலைகாண்மற் றெங்கண்மலை யம்மே. | | | | | | | |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 17. | கச்சைப் பொருது மதர்த்தெழுந்து | கதிர்த்துப் பணைத்த மணிக்கொங்கைப் | பச்சைப் பசுங்கொம் பங்கயற்கட் | பாவை பயந்த வாறிருதோட் | செச்சைப் படலை நறுங்குஞ்சிச் | சிறுவன் றனக்குப் பெருந்தடங்கட் | கொச்சைச் சிறுமி தனைக்கொடுத்த | குறவர் குலமெங் குலமம்மே. | | | | | | | |
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 18. | கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக் | கிழங்குகல்லி யெடுப்போம் | குறிஞ்சிமலர் தெரிந்துமுல்லைக் | கொடியில்வைத்துத் தொடுப்போம் | | | |
16. பிணை - பெண்மான். மரை - ஒருவகை விலங்கு. கும்பமுனி - அகத்தியர்.
17. செச்சைப்படலை - வெட்சிமாலை. சிறுவன் - முருகக் கடவுள். சிறுமி: இங்கே வள்ளி நாயகி.
18. விழுந்த - தாழ உண்டான. கல்லி - தோண்டி. தேறல் - தேன். விருந்து - விருந்தினர். பாயல் - படுக்கை. வினை - பாவத்தை.
|