| 9. திருவெங்கைக்கோவை |
|
| இறையோ னிறைவி தன்மையியம்பல் |
| |
| |
போதே முகமிளஞ் சேலே விழிபசும் பொன்னுரைத்த சூதே முலைசெந் தளிரே யடிகதிர்ச் சோதியொடு வாதே புரியுந் திருமே னியர்வெங்கை மங்கையர்க்கு மாதே யிடையொன்று மல்லாமற் பொய்யல்ல மற்றவையே.
|
(88) |
| |
| பாங்கி தலைவியருமை சாற்றல் |
| |
| |
ஒறுத்துப் புரஞ்சுடு மெம்மான் றிருவெங்கை யூரின்மலர் பொறுத்துக் கொளும்பொனென் றெண்ணே லிராசிப் புதுத்துலையாற் கறுத்துத் தழைந்த குழலோடு கொங்கைக் கனத்தசெம்பொன் நிறுத்துக் கொளும்பொனன் றோவெளி தோசொ னெடுந்தகையே.
|
(89) |
| |
| தலைவ னின்றியமையாமை யியம்பல் |
| |
| |
பொங்கூ ழொளிநிகர் வெங்கைபு ரேசர் பொருப்பிடத்தில் வங்கூழ் வழங்கும் வியன்ஞாலந் தன்னில் வளர்ந்தெழுந்த பைங்கூழ் புயலின் றமையாத வாறெனப் பாவைநல்லாய் இங்கூழ் தருமென் கொடியன்றி வாழ்தலின் றென்னுயிரே.
|
(90) |
| |
| பாங்கி நின்குறை நீயேசென்றுரை யென்றல் |
| |
| |
தீயே னுளங்குடி கொள்வெங்கை வாணர் செழுஞ்சிலம்பில் வீயேறு மென்றொடைத் தோளண்ண லேயயல் வெறொருவர் போயே யுரைப்பின் மனமிரங் காளெங்கள் பூங்கொடிக்கு நீயே வணங்கி மனமுளைந் தோதுக நின்குறையே.
|
(91) |
| |
| பாங்கியைத் தலைவன் பழித்தல் |
| |
| |
கல்லைக் குழைத்துப் பயின்றுள தாகிய கல்வியுடைத் தில்லைப் பதியி னடமாடும் வெங்கைச் சிவனையல்லாற் சொல்லைக் கொடுநின் மனநாங் குழைப்பத் துணிதலொரு புல்லைக் கொடுதண் கடனீந்த வுன்னுதல் பூங்கொடியே.
|
(92) |
| |
| பாங்கி பேதைமையூட்டல் |
| |
| |
மானைக் கவர்வம் மழுவிலை யேல்வெங்கை வாணர்க்கந்த வானைப் புணர்மதி கீள்வே மகப்படின் மானுக்கென்னுஞ் சேனைக் குறவர் மகளா கியவித் திருந்திழையாள் ஆனைத் திறலுடை யாயறி யாளுன் னருந்துயரே.
|
(93) |
| |
|
| |
88. போது-தாமரைமலர். பசும்பொன் உரைத்த சூது-பசும் பொன்னுரைக்கப்பெற்ற சூதாடுகருவி. 89. மங்கையர் என்பது பருவங் குறியாது நின்றது. ஒறுத்து-வருத்தி. இராசிப்புதுத்துலையென்றது துலாராசியை. பொன்-தேமல். 90. ஊழ்-வெயிற் கற்றை. வங்கூழ்-காற்று. ஊழ்தரும்-ஊழினாற் கொணர்ந்துதரப்பெற்ற. இன்று-இல்லை. 91. வீஏறு-வண்டுகள் ஏறப்பெற்ற. உளைந்து-வருந்தி. 92.2 கல்லை குழைத்து-மேருமலையை வளைத்து. பயின்று-பழகி. கல்-கல்லாலமைந்த மலை. 93. கவர்வம்-பற்றுவோம். திருந்திழையாள்-திருத்தமாகிய அணிகலன்களையணிந்தவள். அருந்துயர்-பொறுத்தற்கரிய துன்பம்.
|
|
|
|