| 9. திருவெங்கைக்கோவை |
|
| காதலன்றலைவி மூதறிவுடைமை மொழிதல் |
| |
| |
விடுத்த மயலுடை யெம்மான் றிருவெங்கை வெற்பணங்கே எடுத்த விடைமுறிக் குங்கொங்கை யேயன்றி யென்னையெய்யத் தொடுத்த குவளைக் கணைவாங்கி வின்மதன் றூணியிட அடுத்த கடைக்கண்வைத் தாரறி யாமை யறிந்திலரே.
|
(94) |
| |
| பாங்கி முன்னுறுபுணர்ச்சி முறையுறக்கூறல் |
| |
| |
மருவீர வெண்மதி வேணிப்பி ரான்வெங்கை வான்பொழில்வாய் இருவீரு மொத்துப் புணர்ந்தாற் பயநுமக் கென்னையொன்னார் பொருவீர வாள்விழிக் காப்பதி னாயிரம் பொய்யுரைத்து வருவீ ரறிந்திலி ரேயுல கோதும் வழக்குரையே.
|
(95) |
| |
| தன்னிலைதலைவன்சாற்றல் |
| |
| |
மண்ணைக்கொண் டுண்ட பெருமான் றொழும்வெங்கை வாணர்வெற்பிற் பண்ணைக்கொண் டுற்ற மொழியா யுனையன்றிப் பாரமுலைப் பெண்ணைக்கொண் டின்பம் பெறநான் விரும்பப் பெறிலதுதான் கண்ணைக்கொண் டன்றி வழிதா னடப்பக் கருதுதலே.
|
(96) |
| |
| பாங்கியுலகியலுரைத்தல் |
| |
| |
வெண்டாம ரைமுளைப் பாலிகை வாளர விந்தச்செந்தீக் கொண்டாவி யிற்சங்க மார்ப்பக் குவளை மணம்புணர்ந்து வண்டாடு நல்லிய லூரவெம் மான்வெங்கை மாதினைநீ கண்டாசைப் பட்டனை யேல்வரைந் தேகொள் கடைப்பிடித்தே.
|
(97) |
| |
| தலைமகன்மறுத்தல் |
| |
| |
தாமக் குழலை வரைந்துகொண் டேவெங்கைத் தாணுவெற்பிற் காமக் கனலைத் தணிப்பாயென் றோதிய காரிகைநீ நாமக் கிணறகழ்ந் தந்நீர் கொடுநன் னகரிற்பற்றி வேமக் கனலை யவிப்பாயென் பார்களின் வேறல்லையே.
|
(98) |
| |
|
| |
94. விடுத்த மயலுடை-மையலைவிட்ட. தூணியிட-ஆவத்தில் வைக்குமாறு. தூணி-அம்பு வைக்குங்கூடு. அறியாமையறிந்திலர்-அறிவறிந்தவர். 95. மருவீர வெண்மதி-ஈரம்மருவு வெண்மதி. வேணி-சடை. ஒன்னார்-பகைவர் வழக்குரை-உலக வழக்கச்சொல். 96. மண்ணைக்கொண்டுண்ட பெருமான்-திருமால். பண்ணைக்கொண்டு-இசையைக்கொண்டு. 97. அரவிந்தம்-தாமரை. ஆவி-தடாகம். கடைப் பிடித்தல்-உறுதியாகப் பற்றுதல். 98. தாமம்-மாலை. குழல்-குழலையுடையவள். நாமம்-அச்சம். தாணு-சிவபிரான்.
|
|
|
|