| 9. திருவெங்கைக்கோவை |
|
| பாங்கி குறியிடத்திறைவியைக் கொண்டுசேறல் |
| |
| |
புணர்பூத்த வார்முலை யாய்மலர் தாங்கொய்யப் போதுவமந் தணர்பூத்த சொன்மலர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில் இணர்பூத்த கட்கவர் வண்டிசை கூரு மிளங்கொடிப்பெண் துணர்பூத்த கொம்பர்க் கொழுநனொ டாடிய சோலையிலே.
|
(134) |
| |
| குறியிடத்துய்த்து நீங்கல் |
| |
| |
மானேநின் கண்ணிகல் பெற்றுள வாவி மருவலரை யானே யளியினம் பின்றொடர்ந் தார்ப்பக்கொண் டிங்குறுவேன் ஆனே றுடையர் திருவெங்கை வாண ரருண்முருகன் தானே முறுமயி லாடல்கண் டேநிற்க தண்பொழிற்கே.
|
(135) |
| |
| இறையோனிடத்தெதிர்ப்படுதல் |
| |
| |
இயலோடு மல்குந் திருவெங்கை வாண ரிமயவெற்பிற் கயலோடு வள்ளைக் கொடியோடு மோர்பைங் கமுகணங்கும் புயலோடு நல்லிள நீரோடு நின்று புடைபெயருஞ் செயலோடு நிற்பவிங் கின்றுகண் டேனொரு தீங்கரும்பே.
|
(136) |
| |
| புணர்ச்சியின் மகிழ்தல் |
| |
| |
மற்றின்ப முண்டென்ப தன்றா லிவடர வந்தவின்பஞ் சிற்றின்ப மென்பது தென்வெங்கை வாணர் திருநடனம் உற்றின்பஞ் செய்யுஞ் சிதாகாசந் தன்னை யுணர்வுடைமை பெற்றின்ப மெய்தினர் சொல்வர்சிற் றம்பலப் பேர்புனைந்தே.
|
(137) |
| |
| புகழ்தல் |
| |
| |
வெங்கை பழமலை யெம்மா னுழையும் விளங்குமவன் பங்கைப் பெறுமுமை செங்கா வியுமவள் பாலனொரு செங்கைக் கதிர்வடி வேலுந் தரிப்பது செப்பிலிந்தக் கொங்கைக் குடமுடை யாள்விழி காட்டுங் குறிப்பதுவே.
|
(138) |
| |
|
| |
134. புணர்பூத்த-நெருக்கத்தைக் கொண்ட. இணர்பூத்த-பூங்கொத்துக்களில் உண்டாகிய. இசை கூரும்-இசையைப் பாடும். 135. இகல் பெற்றுள்ள-பகைமையைக் கொண்டிருக்கிற. ஆவி மருவலரை-தடாகத்தில் உள்ள மலர்களை. மருஅலர்-மணமுள்ள மலர். ஏமுறும்-மகிழும். 136. இயலோடு மல்கும்-இயலோடு பொருந்திய. அணங்கும்-வருத்துகிற. தீங்கரும்பு-தலைவி. கயல்-கண். வள்ளைக் கொடி-காது. பைங்கமுகு-கழுத்து. புயல்-கூந்தல். இளநீர்-தனம். 137. ஆன்றோர்கள் பேரின்பந்தரும் பேரம்பலத்தைச் சிற்றம்பலமென்று கூறுவார்கள். அதைப்போல இவள் தரும் பேரின்பமுஞ் சிற்றின்பம் என்று கூறப்படுகிறது. இதனினும் பேரின்பம் என்பது ஒன்று இல்லை யென்பதாம். 138. உழை-மான். பங்கு-பாகம். வடிவேல்-வடித்தவேல். செப்புதல்-சொல்லுதல்.
|
|
|
|