| 9. திருவெங்கைக்கோவை |
|
| தலைமகளைத் தலைமகன்விடுத்தல் |
| |
| |
நீயாவி வந்தளித் தாய்தமி யேற்கு நிலாமலினிப் போயாவி நல்கிநிற் காணா தலமரும் பூவையர்க்கு மாயாவி னோதர் திருவெங்கை வாணர் வரையினெதிர் கூயாவி மென்மலர் கொய்துநின் றாடுக கோமளமே.
|
(139) |
| |
| பாங்கி தலைவியைச்சார்ந்து கையுறைகாட்டல் |
| |
| |
நஞ்ச மமுதுசெய் வெங்கைபு ரேசர்நன் னாடனையாய் அஞ்ச முறவளி யெல்லா மடக்கி யமுதவொளி விஞ்சு மதிகண் டிதழ்மூடி யோகம் விளைத்ததனாற் கஞ்ச மிதுமுக சாரூபம் பெற்றது கைக்கொள்கவே.
|
(140) |
| |
| தலைவியைப் பாங்கிற்கூட்டல் |
| |
| |
கங்கை விழியு முகமுஞ்செவ் வாயுங் கரந்துமைக்குச் செங்கை யலுஞ்செங் கமலமு மாம்பலுஞ் செப்புமவர் வெங்கை யனைய விலங்கிலை வேற்கண் விளங்கிழையாய் மங்கை யரையடைந் தம்மனை யாடுகம் வந்தருளே.
|
(141) |
| |
| நீங்கித் தலைவற்கோம்படைசாற்றல் |
| |
| |
பிறவா வடிவன் றிருவெங்கை மேவும் பிரானொடுபோய் உறவா ருயிருற வேயாக்குஞ் சத்தியை யொப்பவின்று குறவாணர் தங்கண் மடமாதை நின்னொடு கூட்டுமெனை மறவா திருமன் னவாவிது வேநல் வரமெனக்கே.
|
(142) |
| |
|
| |
139. ஆவி-உயிர். அளித்தல்-கொடுத்தல். அலமரல்-மனங் கலங்கல். பூவையர்-பூவைபோல்வார். ஆவி மென்மலர்-நீர்ப்பூ. கோமளம்-இளமையும் அழகுமுடையவள். 140. வளியெல்லாம் அடக்கி-வாயு முழுவதையும்அடக்கி. முகசாரூபம் பெற்றது-உன் முகவடிவத்தைப் பெற்றது. அஞ்சம் உற-அன்னப் பறவை பொருந்த. 141. கரத்தல்-மறைத்தல். விளங்கிழை-வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைக் காரணப்பெயர். 142. பிரான்-உபகார குணமுள்ளவன். குறவாணர் தங்கள் மடமாது-தலைவி. நல்வரம்-சிறந்த வரம்.
|
|
|
|