முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
5     கானிருக்க விவ்வீர்ங் கதிர்க்கியைபென் னென்றுமறி
     மானிருக்குங் கைத்தா மரையினான் - யானிருக்குங்
     காயத் திருப்பதுபுன் காரேனக் கொம்போவென்
     றேயப் பிறையிருக்கு மீர்ஞ்சடையான் - தூயமுக்
     கண்ணுமெழின் மூக்கொடுவார் காம்புபுணர் கூவிளமென்
     வண்ணவிலை காட்டும் வதனத்தான் - அண்ணல்
     வழுவை யடர்த்து வயங்கொளெறி பத்தர்
     மழுவை யுவக்கு மழுவான் - பழவடிமைக்
     கண்ணனையுஞ் சில்லோர் கடவுளெனத் தன்னொடும்வைத்
     தெண்ணவழ னஞ்சயின்ற வெம்பிரான் - பெண்ணுருவம்
(6)
10    பெற்ற வருளொடும்போய்ப் பெண்வலைப்பட் டுற்றதுயர்
     அற்ற வறிஞ ரகம்புகுவோன் - முற்றவிரி
     தத்துவமென் றாறாறுந் தாங்கடந்து போயறத்தில்
     எய்த்தவர்க்குக் காட்டு மியல்பினான் -முத்தமணி
     ஆற்றிற் பொருடிருவா ரூர்க்குளத்தி லன்றுசென்று
     தோற்றப் புரியந் தொழிற்சித்தன் - ஏற்றுங்
     கணையைமல ரென்று கருதா மதனைத்
     துணையை விடுத்தெரித்த தோன்றல் - அணையும்
     பிறப்புக் கிறப்புப் பெருமருந்து செய்யுங்
     குறிப்புக் கரியமுது குன்றோன் - சிறப்பப்
(11)
15    பெரியவரைச் சங்கம் பெறப்பந்தி சேர்த்து
     விரிய விலைமுன் விரித்து - வரிசைபட
     அன்னம் படைத்துமிசை யாங்கிடுவ விட்டருத்தி
     மன்னும் பழுக்காய் வரவளித்துந் - தன்னந்
     துறைபடுநர் சென்னியிற்றன் றோழமைவான் கங்கை
     பொறைபடநன் றேறல் புரிந்து - முறைபடுமிம்
     மண்ணின்மேல் வெற்பு வளமுடையே மிம்மடவார்
     விண்ணின்மேல் வெற்பதுநா மேவுவமென் - றெண்ணிமேல்
     கொங்கைக் கலவைக் குளிர்சந் தழித்தலைத்துக்
     கங்கைப் புனலைக் கடுத்தெழுந்துங் - கங்கைக்குத்
(16)
20    தானா யகமென்று தானதனா லெஞ்ஞான்றும்
     ஆனா வினைக ளழித்திட்டும் - மானாகக்
     கோடுங் கழையுங் குடவளையும் விண்முகடும்
     நாடுங் கழையு நளினமலர்க் - காடுங்
     கொடுத்த மணிபலவுங் கொண்டு தனக்கிங்
     கடுத்த பெயரை யளித்தும் - படைத்த
     பழகு புகழிப் படிமுழுதும் போர்ப்ப
     ஒழுகுமணி முத்தா றுடையான் - முழுகுபவஞ்
     சிந்தும் விவசித்துச் செய்பணிக்குக் காரணமாய்
     வந்துமுத னின்றெழுங்காய் வன்னியான் - எந்தை
(21)

6.5-10. பூமேவு செம்மல்-நான்முகன். பாமேவு மங்கை-கலைமகள். ஏ-அம்பு. யாணர்த் தவிசு-அழகிய இருக்கை. எகின் அரசு-நான்முகன். பொறி அரி-திருமகளையுடைய திருமால். மருவரிய-சேர்தற்கரிய. ஏய்-பொருந்தி. அ-அந்த. வழுவை-யானை. அடர்த்து-கொன்று. 11.10-15. ஆறாறும்-முப்பத்தாறும். முத்தமணியாறு-மணிமுத்த ஆறு. மதனை-காமனை. துணையை-இரதியை. 16.15-20. வரை-கீற்றமைந்த. சங்கம்-சங்குகளை. பெற-கூட்டமாக. பந்தி-வரிசை. அன்னம்-அன்னம் பறவை. வெற்பு-மலை. கடுத்து-ஒத்து. 21.20-25. நாயகம்-தலைமை. ஆனா-நீங்காத. கழை-கரும்பு. முகடு-முகட்டை. கழை-மூங்கில். காடு-தொகுதி. பழகு புகழ்-நீங்காத புகழ். படி-பூமி. விவசித்து-இவன் கோசலை நாட்டிலே மணிபிங்கலை நகரத்தில் அந்தண குலத்தில் தோன்றியவன். வறுமை மேலீட்டால் எங்குந் திரிந்தான். ஒரு காலத்தில் ஒரு தெய்வீகச் சுனையில் மூழ்கினான். அங்கே குபேரனுடைய தங்கையாற் கிடைத்த அணிகலன்களைக்கொண்டு கணநாதர் ஒருவர் உணர்த்தியவாறு, முதுகுன்றை யடைந்து உருவிலி வாக்கின்படி உரோமச முனிவருடைய அருளைப்பெற்றான். அருந்தவம் புரிந்து பழமலைநாதருடைய கட்டளையின்படி அணிகலன்கள் வைக்கப்பட்டிருந்த வன்னி மரம் வேண்டிய பொருளைக் கொடுக்க அரிய திருப்பணிகள் பலவும் செய்து வீடுபேற்றையடைந்தான் என்பது விருத்தாசல புராணம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்