முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
25    அருந்தவர்க ளென்று மமரரென்றும் பேரிட்
     டிருந்தவர்க ளெல்லா மிரப்பப் - பொருந்தி
     முனியா தவர்க்குவர முற்றங் கொடுத்திங்
     கினியார் வரவென் றிருப்பான் - நினையாமல்
     வேத வுணவு வெறுத்துப் புகழ்மூவர்
     ஒதுதமி ழூணுக் குழல்செவியான் - தாதையிகழ்
     காலிற்குத் தக்க கணிச்சிகைச் சண்டிசொரி
     பாலிற்குத் தக்க பழமலையான் - சாலிக்குக்
     கைக்கரகத் துற்றிழியுங் காவிரிபோற் சென்றுநறுஞ்
     செக்கரிதழ்த் தாமரையின் றேன்பாய - வக்கமல
(26)
30    ஏடு கனலா யிடுபசும்பொ னொண்பொகுட்டாய்
      மூடு கரியரியாய் மொய்த்ததடம் - பீடுபெற
     ஞாலங் கருதுஞ்செஞ் ஞாயிற் றிரும்பகன்மால்
     கோலங் கருதுங் குளிர்பொழில்வாய்க் - காலங்
     கருதி யிருளிருப்பக் கட்செவிமா ணிக்கம்
     பரிதியென நின்று பருகக் - குருதிபுரை
     சேயொளிய பூண்மணிசூழ் திண்சுவர்முற் றுங்கவரின்
     வாயி றெரிபளிக்கு மாடமுறத் - தூயசுதை
     மாடநம் பிக்கு வழிவிடுவான் விண்ணெழுந்து
     நீடு புனல்போல நின்றிலங்கப் - பாடநகர்
(31)

26.25-30. அமரர்-தேவர்கள். முனியாது-சினவாமல். இனையாமல்-வருந்தாமல். தமிழ்ஊண்-தேவாரப் பாடல்கள். உழல் செவியான்-ஏங்குகிற காதுகளையுடையவன். கணிச்சி-மழு. சண்டி-சண்டேசுரர். சாலி-நெற்பயிர். செக்கர் இதழ்-சிவந்த இதழ். கமலம்-தாமரை.31.30-35. பொகுட்டு-தாமரை மொட்டு. அரி-வண்டு. பீடுபெற-பெருமையை அடைய. கருதும்-எண்ணும். பரிதி-கதிரவன். குருதிபுரை-உதிரத்தைப்போன்ற. சேயொளி-செந்நிற வொளி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்