11. திருவெங்கையுலா |
|
|
35 இந்திரனுக் கன்றிங் கெனக்கென்று வேளசைத்த பைந்தழைய தோரணம்விண் பாலசைய - வந்தணையில் நாயகனா னீக்குதுயி னங்கை விளக்கவிப்ப மேய மணிப்பூண் விளக்கேற்றச் - சேயிழையார் முன்றிற் றுகண்மாற்ற மொய்குழலிற் பூந்தொடைகள் அன்றித் துகளா லதுநிரப்ப - மன்றில் கொழுநன்சொன் மாதுகிளி கூறா தடக்கப் பழகுமயற் பூவை பகர - வெழிலி மறைத்திருந்து செல்லமணி மாளிகையை வேத முறைத்திருந்து தீப்புகைபோய் மூட - நறைத்திருந்து
|
(36) |
|
|
40 செந்தா மரைநாதன் றேரிற் பதாகையொடு நந்தா மதிற்கொடிக ணட்பாடப் - பந்தாடும் மங்கையர்கள் செங்கை வளையொலிப்ப வேர்மலியும் வெங்கை நகரிருப்பு வேண்டியே - பங்குபடு பெண்ணாசை நம்பிபசும் பொன்னாசை பெற்றவுளம் மண்ணாசை தானு மருவுதலால் - விண்ணாசை கொள்ளுஞ் சிறப்புக் கொடுப்பத் திருவுளங்கொண் டெள்ளுங் குறியவுரு வின்றுபொய்த் - தெள்ளுங் கனவு நனவுபோற் காட்டி யிரந்து மனைவியுமை யோடு மணந்து - வினவினர்க்குப்
|
(41) |
|
|
45 பண்டை யறத்தின் படிவமிது வென்னவுருக் கொண்டவிலிங் கையன் குலமைந்தன் - உண்ட படிதாங்கி மாயன்றேர்ப் பார்தாங்கி யாங்கெம் குடிதாங்கி நல்லிசைமென் கோதை - முடிதாங்கு கல்வி யுறநீல கண்டன் றுணைவனலர்ச் செல்வி யுறையுந் திருமார்பன் - வல்விரகம் பூண்ட மடந்தையரே பொல்லா னெனுநல்லான் தூண்டு திகிரிச் சுமைதுறந்தான் - யாண்டும் இலையென்றல் கேட்பவுமின் னாதென் றிரப்போர் நிலைகண்டாங் கெப்பொருளு நேர்வோன் - அலையுண்டு
|
(46) |
|
|
|
36.35-40. பைந்தழைய-பசிய தழைகளாலாகிய. பூண் விளக்கு-அணிகலன்களின் ஒளியே விளக்காக. அன்றுதல்-பகைத்தல். 41.40-45. செந்தாமரைநாதன்-கதிரவன். நந்தா-கெடாத. ஏர்மலியும்-அழகு மிகும். பங்குபடு-பழுது பொருந்திய. படிவம்-வடிவம். 46.45-50. நீலகண்டன்-கரிய கழுத்தையுடைய சிவபிரான்-விரகம்-காதல்.
|
|
|
|