11. திருவெங்கையுலா |
|
|
50 பாலாழிக் கின்றுநிலை பான்மதிக்கென் றொப்பிகந்து தோலா துலகனைத்துஞ் சூழ்புகழான் - மேலாய செங்கமல வாணற்கே செந்நாவின் மேவுதல்வெண் மங்கையெனு மவ்வுரையை மாற்றியே - சங்கையற மூவுலகு ளோர்க்குமுதுசீர்த்தி வெண்மங்கை நாவுறைய வைத்த நலத்தினான் - தேவிகலி வந்துதன்சீர் பாடுநரை மண்மீதி லந்நிலையே இந்திரன்றா னாக்கு மியல்பினான் - நிந்தையற உண்டு பணையலரென் றொண்காவைக் கீழ்ப்படுத்திக் கொண்டு புரைதீர் கொடையினான் - கண்டுபுகழ்
|
(51) |
|
|
55 பண்பு மலாது பயனும் புணர்ந்துநிதித் தண்பதுமம் வென்ற தடக்கையான் - வண்புலவர் தம்மைவிழி காக்குந் தகவி னிமைபோலச் செம்மை பெறக்காக்குஞ் சீருடையான் - மெய்ம்மைபெற நல்லா ரொருவ ருளரே லவர்பொருட்டால் எல்லார்க்கும் பெய்யுமழை யென்றுமுனஞ் - சொல்லாடும் ஐய மகல வகிலமெலாந் தற்சுட்டிப் பெய்யுமழை யென்னும் பெயராளன் - துய்ய மறையோர் மிடிப்பகைஞன் வாய்மைநா மென்றும் அறையோ மெனப்பொய் யறைவான் - முறையோதி
|
(56) |
|
|
60 வேலிபுறஞ் செய்ய விளைத்துக் கரும்பயிலக் கூலி கொடுக்குங் குலத்தோன்றல் - மாலிரவும் ஆர்த்தி விருந்தா லடையாக் கதவழகு மாத்திரையாய் நின்றொளிரும் வாய்தலான் - பூத்தபொருள் ஏதப் படாம விருந்துதவ நல்லறமென் பூதப் படியுட் புதைக்கின்றோன் - வேதன் நிலம்பெயர்த்து வைத்த நெடுவேரிற் சென்னி குலம்பெயர்த்து வைத்த குணத்தான் - தலம்படைத்தோன் கண்ட குலத்திற் கருதி னிரட்டியாம் பண்ட குலத்தின் பயனானான் - மண்டலிகர்
|
(61) |
|
|
65 நல்லகோ லின்று நவைக்கோ லெனச்செயுங்கோல் வல்லகோ லண்ணா மலைவள்ளல் - மல்லலுறச் சந்தி பொருத்தித் தகுஞ்சீர் கெடாதடுக்கிப் புந்தி மகிழற்புதவணித்தா - முந்தையோர் செய்யுள்போற் செய்த திருக்கோயி லுள்ளிருந்தெம் பையுள்போக் கிற்கும் பரஞ்சோதி - மையுள் இருந்தபுன் மாக்கடமை யென்றுந் துதியா வரந்தரவென் முன்னின்ற வள்ளல் - வரைந்தவிடை பவனி தன்மதியி லென்றூழ் தனதுமதி காட்டியறப் பொன்மலியுங் கப்பம் புகவேற்றிச் - சொன்மலியும்
|
(66) |
|
|
|
51.50-55. பாலாழி-பாற்கடல். தோலாது-தோற்காமல். செங்கமலவாணன்-நான்முகன். பணை-கிளை. புரைதீர்-குற்றம் போக்கிய. 56.55-60. நிதித்தண்பதுமம்-பதுமநிதி. தடக்கை-பெரிய கை. மிடிப்பகைஞன்-வறுமைக்குப் பகையாக இருப்பவன். 61.60-65. அயில-தின்ன. ஆர்த்திவிருந்து. மகிழ்ச்சியை உண்டாக்கும் விருந்து. சென்னி-சோழன். வாய்தல்-வாசல். ஏதம்-குற்றம். 66.65-70. பையுள்-துன்பம். மையுள்-மயலுக்குள்.
|
|
|
|