முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
70    இந்திரனு மேனோரு மேத்தத் திருவுலா
     வந்தருளு நல்விழவுண் மற்றொருநாள் - சந்தமறை
     முன்னூல் வடிவுகொடு முந்நூல் புனைந்தன்ன
     பொய்ந்நூ றருமறையோர் போந்தெள்ளின் - நெய்ந்நூறு
     மாமஞ்ச ணெல்லி வருமானைந் தையமுதம்
     ஏமந் தருநெய் யிளவெந்நீர் - தேமுந்து
     வில்வநீர் கர்ப்புரம்பால் வெண்டயிர்செந் தேன்கரும்பின்
     செல்வநீர் பல்கனியின் றீஞ்சாறு - நல்லிளநீர்
     சந்தன மென்பனிநீர் சங்கப் புனன் முதலா
     வந்தன கொண்டுதிரு மஞ்சனத்தோ - டுந்துதிரைக்
(71)
75    கங்கை நிறந்திரியக் கன்னிப் பிறைதிகைப்பப்
     பொங்கி யலைத்துப் புறம்போந்து - செங்கயல்கள்
     பாயுந் தடமாப் படர்சடைமீ தாட்டியபின்
     ஏயுங்கற் பான்மலைமா னெள்ளாத - மாயும்
     புலியுரி மாற்றிப் புனைமணிய பாம்பின்
     மெலியுரி யன்னதுகில் தேய்ந்து - வலிகெழுநற்
     பஞ்சவ னென்ன முடிசூட்டிப் பார்வைக்கீழ்ச்
     செஞ்சுடர்ப்பொற் றட்டிற் றிலகமுமிட் - டுஞ்சனிகர்
     காதிற்குந் தோளிற்குங் கண்டமணிப் பூணென்னச்
     சோதிக் குழைகள் சுமப்பித்து - வாதிப்பில்
(76)
80   உண்ட வழனஞ் சொழுகிப் பரந்ததெனக்
      கண்ட முழுதுங் கருஞ்சாந்து - கொண்டணிந்து
     பொன்னனையார் நெஞ்சியங்கப் பூங்கலவைச் சேற்றிலிடுங்
     கன்னிரைபோன் முத்தவடங் கைபுனைந்து - தந்நிகர்மைந்
     நாக நினைவுவர நாறு மலர்த்தாமம்
     ஆக முழுது மணிந்திட்டுப் - பாக
     மதிய மணியிழைத்து வைத்தன்ன செம்பொற்
     புதிய மதாணி புனைந்து - நிதியவணி
     மாத்திரைதா னன்றி வளைவடுவுங் காக்குமெனச்
     சேர்த்தினர்கே யூரந் திகழ்வித்துச் - சாத்தியபூண்
(81)

71.70-75. சந்தமறை-இசைவடிவான மறை. முந்நூல்-முப்புரிநூல். ஆனைந்து-ஆக்களின் ஐந்து பொருள். ஐயமுதம்-பஞ்சாமிர்தம். சங்கப்புனல்-சங்குநீர். 76.75-80. வேய்ந்து-உடுத்து, குழைகள்-குண்டலங்கள். 81.80-85. அழல்நஞ்சு-தீயைப்போன்ற நஞ்சு. முத்தவடம்-முத்துமாலை. கைபுனைந்து-அழகு செய்து. பைந்நாகம்-படத்தையுடைய பாம்பு. மலர்த்தாமம்-மலர்மாலை. ஆகம்-உடல். மதாணி-மார்புப்பதக்கம். கேயூரம்-தோளணி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்